Video: "November Story.. KV ஆனந்த்.. தனுஷ்.. 16 வருஷ திரைப்பயணம்".. தமன்னா Exclusive!
முகப்பு > சினிமா செய்திகள்விகடன் மற்றும் ஹாட் ஸ்டார் கூட்டு தயாரிப்பில் தமன்னா, பசுபதி, ஜி.எம்.குமார், அருள் தாஸ் மற்றும் பலர் நடித்த நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸின் அனைத்து எபிசோடுகளும் டிஸ்னி+ஹாட் ஸ்டார் விஐபியில் வரும் மே 20-ஆம் தேதி மொத்தமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் Behindwoods-ல் சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார் நடிகை தமன்னா.
அதில், “நான் நன்றாக இருக்கிறேன், வீட்டில் இருக்கிறேன். ஆனால் தினம் தினம் கேட்கும் செய்திகள் அதிர்ச்சியை அளிக்கின்றன. மக்கள் இந்த நேரத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்து விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவேண்டும். நம்முடைய ஹெல்த்கேர் சிஸ்டத்தின் மீது பிரஷர் போடுவதில் பயனில்லை. தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து திரைத்துறையில் நடிப்பு பயணத்தில் கிட்டத்தட்ட 16 வருடங்களாக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் தமன்னாவிடம் அதுபற்றி கேட்டபோது, “நம்முடைய வெற்றி தோல்விகள் ஒவ்வொன்றையும் அடுத்து, நாம் மீண்டும் ஒவ்வொன்றையும் புதிதாக தொடங்க வேண்டியிருக்கிறது. அத்துடன் புதிய தலைமுறைகள் வருகிறார்கள். இது வேகமான உலகமாக இருக்கிறது. ஒரு ஆர்ட்டிஸ்டாக ஒரு நடிகராக ஒரு கலைஞராக நாம் நேரத்துக்கு நேரம் அவற்றை அப்டேட் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. புதிய தொழில்நுட்பம் வருகிறது. எனவே இதற்கு தகுந்தாற்போல் அப்டேட் ஆகி சர்வைவல் ஆகி நிலைக்க வேண்டும். ஆர்டிஸ்டுக்கு அது இன்னும் கூடுதல் பொறுப்பாக இருக்கிறது.
இந்த 16 வருடத்தில் என்னுடன் பணிபுரிந்த பலரும் எனக்கு மிகவும் உறுதுணையாகவும் ஊக்கமாகவும் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக நடிகர் தனுஷ் மாதிரியான நண்பர்கள் ஊக்கமாகவும் இருந்து வருகின்றனர். சிலர் நமக்கு கரம் தந்து தூக்கிவிட பார்ப்பார்கள் சிலர் நம்மை எழ முடியாமல் அமுக்க பார்ப்பார்கள் இருவரையும் நாம் இந்த பயணத்தில் சந்தித்து கையாள வேண்டும்.
சர்வதேச அளவில் சீசன் 1, சீசன் 2 என்று வெப் கண்டெண்ட்கள் ஹிட் அடிக்கின்றன. எனினும் பிராந்திய மொழியில் இப்படியான வெப் கண்டண்ட்கள் இத்தனை குவாலிட்டியுடன் வருவது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. அப்படி ஒரு அரிதான கண்டண்டுடன் இப்படத்தின் இயக்குநர் ராம் அணுகினார். இயக்குநர் ராமுக்கு இது முதல் திரைப்படம். இப்படி அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடியாத திரைக்கதையை எழுதுவதும் அத்துடன் கூடிய ஒரு திரைப்படத்தை எடுப்பதும் மிகவும் கடினம். மிகவும் கிரிப்பான ஒரு திரைக்கதை மற்றும் என்னுடைய சுவாரஸ்யமான கதாபாத்திரம் இவை இரண்டும் தான் இந்த படத்தை நான் தேர்ந்தெடுத்ததற்கு மிக முக்கியமான காரணம்.
ALSO READ: “உன் முகத்தை கூட காட்டலனு உன் மகள் அழறாண்ணா”.. மாறன் மறைவு குறித்து பா. ரஞ்சித்!
இது இரண்டுமே எழுத்தில் நன்றாக வந்திருக்கின்றன. இந்த கொரோனா பெருந்தொற்று சூழலில் நம்முடைய பார்வையாளர்களுடன் நாம் தொடர்பில் இருக்கக் கூடிய ஒரே வழி ஓடிடி தளமாகவே இருக்கிறது. நாம் திரையரங்குக்கு சென்று நாம் விரும்பும் கண்டெண்ட்களை பார்க்க முடியாத சூழல் இப்போது இருக்கிறது. ஒருகட்டத்தில் அனைவரும் இந்த இணையச் சூழலுக்கு வந்தடைகின்றனர். அத்துடன் புதிய புதிய கதைகளை எழுதிக் கொண்டு வருவார்கள். பெண்களுக்கான புதிய கதாபாத்திரங்கள் உட்பட நிறைய மாற்றங்கள் நிகழும். எனவே இன்னும் பலர் இந்த மாதிரியான ஓடிடி தளங்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். வழக்கமான சினிமாக்களும் வழக்கமான கதாபாத்திரங்களும் உடைந்து புதிய விஷயங்கள் மலரும்.
நான் இப்படித்தான் நடிப்பேன், இப்படியான கதாபாத்திரங்களில் தான் நடிப்பேன் என்று ஒரு இமேஜ்க்குள் எப்போதும் சிக்கிக் கொள்ளவில்லை. பெரும்பாலான நடிகர்கள் ஹீரோ அல்லது வில்லன் என்னும் இரண்டு வகையான கதாபாத்திரங்களுக்குள் நின்று விடுகின்றனர். ஆனால் மக்கள் இன்னும் ரியலான கேரக்டர்களை எதிர்பார்க்கிறார்கள். எதார்த்த மனிதர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப இரண்டு விதமாகவும் மாறி மாறி தான் பயணப்படுகிறார்கள். அப்படி இருக்க, திரையில் மட்டும் ஒன்று ஹீரோவாகவோ அல்லது வில்லனாகவோ மட்டும் நடிப்பது என்பது இன்றைய ரசனையில் தலைமுறை மாறியதால் பெரிதும் மாறி இருக்கிறது என்று சொல்லுவேன் . இன்னும் எதார்த்தமான ஸ்டீரியோ கதாபாத்திரங்களை பார்வையாளர்கள் பார்க்க விரும்புகிறார்கள். கேடி திரைப்படத்தில் நான் நடித்தது முழுமையான ஒரு பிளாக் கேரக்டர் அல்ல. அது ஒரு ஸ்டீரியோ கேரக்டர்தான். எனினும் இப்போதும் ஒரு பிளாக் கேரக்டரில் நடிப்பதற்கும், அதை எந்த மொழியில் நடிக்க வேண்டும் என்பதற்கும் எந்தவிதமான தடையும் எனக்கு இல்லை. அது ஒரு சரியான கேரக்டராக அமைந்தால் மட்டும் போதும்!.
என்னுடைய தந்தை என்னுடைய கரியர், வாழ்க்கை என எல்லாவற்றிலும் முக்கியமானவர்.அவர் ஒரு உறுதியானவர். பெற்றோர்கள் நாம் குழந்தைகளாக இருக்கும்பொழுது நம்மை கவனிக்கிறார்கள். ஆனால் நாம் வளர்ந்த பிறகு அவர்கள் குழந்தைகளாவதை நாம் கவனிப்பதில்லை. அவர்கள் நாம் அவர்களின் அருகில் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். நம்முடைய உறுதுணை அவர்களுக்கு தேவைப்படுகிறது. நவம்பர் ஸ்டோரி எனும் இந்த த்ரில்லர் கதையில் எனக்கும் என் தந்தைக்குமான உறவை நான் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. பொதுவாகவே பெண் பிள்ளைகள் தந்தையுடன் அப்படி ஒரு பிணைப்புடன் இருப்பார்கள். என் தந்தைக்கும் எனக்குமான பிணைப்பு அப்படியானது தான்.” என குறிப்பிட்டார்.
மேலும் சூர்யாவுடன் இணைந்து அயன் திரைப்படத்தில் நடித்திருந்தார் தமன்னா. இந்த படம் 100 நாளைக்கு மேல் ஓடி நல்ல ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தை இயக்கியவர் கே.வி.ஆனந்த். அண்மையில் மறைந்த இவரது மறைவு குறித்துப் பேசிய தமன்னா, “நான் இன்னும் அதிலிருந்து மீளவில்லை. அவர் ஒரு மறக்க முடியாத இயக்குநர. ஏனென்றால் நான் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் இருக்கின்றன என்பதை அயன் படத்துக்கு முன்னதாக கவனித்தவர் அவர். அவருடைய மரண செய்தி எனக்கு முதலில் விளங்கவில்லை. எப்படி நடந்தது என்று. நான் இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவலுக்காக அந்த நேரத்தில் காத்திருந்தேன். ஒளிப்பதிவாளராக இருந்து மிகவும் நுணுக்கமான முறையில் திரைப்படத்தை இயக்கி வந்த கே.வி.ஆனந்த் தொழில்நுட்பங்களை பார்த்து பார்த்து பயன்படுத்தக் கூடியவர். அவரை திரைத்துறை நிச்சயமாக இழக்கிறது. நானும் அவரை மிஸ் பண்ணுகிறேன்.” என்று பேசிய தமன்னாவின் முழு பேட்டி வீடியோ இணைப்பில் இருக்கிறது.
VIDEO: "NOVEMBER STORY.. KV ஆனந்த்.. தனுஷ்.. 16 வருஷ திரைப்பயணம்".. தமன்னா EXCLUSIVE! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Tamannaah’s November Story Trailer Is Sure To Leave You At The Edge Of Your Seats
- Kajal Aggarwal Yogi Babu Ghosty Firstlook Tamannaah
- Madurai HC Notice To Virat Kohli Tamannaah Online Betting
- For This Superhit Film’s Remake, Tamannaah And Nabha Natesh Teams Up With Nithiin Ft Andhadhun Telugu
- Tamannaah And Nabha Natesh Finalised For Nithin's Andhadhun Remake | அந்தாதுன் ரீமேக்கில் நடிக்கும் தமன்னா மற்றும் நபா நடேஷ்
- Vijay May Not Pair Up With Tamannaah For AR Murugadoss' Thalapathy 65 | தளபதி 65க்காக விஜய்யுடன் தமன்னா ஜோடி சேரவிருப்பதாக வெளியான தகவல் கு
- நடிகை தமன்னாவின் வீட்டில் கொரோனா | Actress Tamannaahs Parent Tested For Coronavirus
- Parents Test Positive For Coronavirus While Tamannaah Test Negative For Covid 19
- Popular Actress' Intense Yoga Routine Viral Pics Gives Major Fitness Goals Ft Tamannaah
- Tamannaah Raises The Temperature In This Unseen Bikini Pic
- Prabhas Shares A Surprise Video As Baahubali The Beginning Completes 5 Years Ft Rana, Tamannaah
- Tamannaah Opens Up About Her Early Days In Acting Career
தொடர்புடைய இணைப்புகள்
- நான் அப்பாவுக்காக அம்மா கூட சண்ட போடுவேன், அம்மா பாவம்😅❤-Tamannaah Opens Up | #Shorts
- കാറിനു പകരം Mini Bus ഓടിച്ചു ലൊക്കേഷനിലെത്തി തമന്ന - Video കാണാം | TK
- 🔴 WARNING: "iPhone வாங்குறப்போ..." - Nagarjuna சரமாரி குற்றச்சாட்டு | Bigg Boss Telugu
- பிரபலங்கள் கலக்க வரும் Digital Series - 2020 OTT Releases
- 🔴 Video: Corona-க்கு பிறகு வீடு திரும்பிய Tamannaah, காத்திருந்த Surprise
- Tamannaah Bhatia - Chand Sa Roshan Chehra (Hindi) | Then & Now: Debut Movie Pics Of Your Favorite Heroines Who Stole Million Hearts! - Slideshow
- Tamannaah - Kanne Kalaimaane | 10 Best Performances (Female) In 2019 - Tamil Cinema - Slideshow
- Vikram Prabhu, DSP And Tamannaah | Kamal60: From Thalaivar To Isaignani, Here's The Official Pictures From The Event Ungal Naan - Slideshow
- Tamannaah As Lakshmi | From Makkal Selvan To Bollywood Superstar - Name And Character Revealed | Sye Raa Narasimha Reddy - Slideshow
- யாருய்யா Nesamani? கடவுளா அவரு? - Nandita Plays Kiss Me😘 Hug Me🤗 Slap Me👋 | KHS
- Devi 2 Official Making Video | Prabhu Deva | Tamannaah | Vijay | Sam C S
- Kanne Kalaimaane Official Making Video | Udhayanidhi Stalin | Tamannaah | Seenu Ramasamy