www.garudabazaar.com
www.garudabazaar.com

மாஸ்டர் படத்தை அடுத்து தனுஷ் படத்தில் நடிக்கும் வில்லன் நடிகர்... செம வைரல் நியூஸ் இப்போ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த மாஸ்டர் திரைப்படத்தில் இரு சூப்பர்ஸ்டார்களான தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரங்களுக்கு இடையே மோதல் பார்வையாளர்களைச் சீட்டின் நுனிக்கு கொண்டு வரக்கூடியவை. சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்றுக்கு அனுப்பப்படும் குடிபோதைக்கு அடிமையான பேராசிரியர் ஒருவருக்கு, அந்த பள்ளியின் குழந்தைகளைக் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தி வரும் கேங்க்ஸ்டர் ஒருவருடன் மோதல் ஏற்படுகிறது எனபது தான் கதை. இந்நிலையில் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் பல்வேறு குழந்தை நட்சத்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் மகேந்திரன் விஜய்சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

popular master actor joins dhanush 43 தனுஷ் படத்தில் நடிக்கும் வில்லன் நடிகர்

அதேபோல் நடிகர் தனுஷ் மீண்டும் சத்ய ஜோதி பிலிம்ஸுடன் இணைந்து டி43 என்ற பெயரில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இளம் மற்றும் திறமையான இயக்குனர்களில் ஒருவரான கார்த்திநரேன் இந்தப் படத்தை இயக்குகிறார். கடந்த மாதம் முறைப்படி பூஜை, பாடல் ஷூட் ஆகியவற்றை தொடங்கிய படக்குழுவினர் ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ் பாடிய பாடல் காட்சியை படமாக்கினர். ஆம் தனுஷின் டி43 படத்தில் மாஸ்டர் பிரபலம் தற்போது இணைந்துள்ளார். ஆம், மாஸ்டர் படத்தில் இளம் பவானி வேடத்தில் நடித்த மகேந்திரன் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Dhanush, Master

தொடர்புடைய இணைப்புகள்

popular master actor joins dhanush 43 தனுஷ் படத்தில் நடிக்கும் வில்லன் நடிகர்

People looking for online information on Dhanush, Master will find this news story useful.