www.garudabazaar.com
www.garudabazaar.com

கர்ணன் படத்தின் 'கண்டா வரச்சொல்லுங்க!' பாடல்.. தயாரிப்பாளர் முக்கிய அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனுஷை கதாநாயகனாக வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

Dhanush Karnan first single announcement கர்ணன் தனுஷ்

கதாநாயகியாக ரெஜினா விஜயன் நடிக்கும் இந்த படத்தில் ராஜிஷா, லால், யோகிபாபு, லட்சுமி பிரியா, கவுரி கிஷன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருகிறார். இந்த படத்தில் தமது டப்பிங் பணிகள் முடிந்து விட்டதாக அண்மையில் தனுஷ் ஒரு புகைப்படத்துடன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனை அடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ், கர்ணன் படத்தில் தனுஷ் கதறி அழுவது போன்ற ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தார்.

இதனிடையே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதனுடன் ஏப்ரல் 4ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என்கிற தகவலும் இடம் பெற்றது.

இந்நிலையில் கர்ணன் படத்தின் “கண்டா வர சொல்லுங்க ” முதல் சிங்கிள் டிராக் நாளை இரவு 8 மணி அளவில் வெளியிடப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ALSO READ: "ஒரு நிமிஷம்.. என்ன நடக்குது இங்க?".. ஆரியின் 'நெகிழ்ச்சி' செயல்!.. பரவும் வீடியோ!

Dhanush Karnan first single announcement கர்ணன் தனுஷ்

People looking for online information on KandaaVaraSollunga will find this news story useful.