www.garudabazaar.com

பிரபல திரைப்படக் கலைஞரின் மறைவுக்கு ஷாந்தனு உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த சில மாதங்களாக பிரபலங்களின் மறைவு செய்திகள் திரையுலகினர் மட்டுமல்லாமல் ரசிகர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கோலிவுட்டின் திரையுலகில் பிரபல ஒப்பனைக் கலைஞரான மேக்கப் பாபு நேற்று (04/09/2020)  மரணமடைந்தார்.

Popular Makeup artist Babu passed away | பிரபல மேக்கப் கலைஞர் பாபுவின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல்

அவரது மறைவு பிரபலங்கள் பலரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகராகவதற்கு  முன்பு இருந்தே என் முதல் மேக்கப் மேன் மேக்கப் பாபு அண்ணா. மேலும் விளம்பர பட உலகில் சிறந்த ஒப்பணைக் கலைஞர்களில் ஒருவர். கேமராவுக்கு பின்னால் பணிபுரிந்த பேசப்படாத ஹீரோ.

Popular Makeup artist Babu passed away | பிரபல மேக்கப் கலைஞர் பாபுவின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல்

இரண்டு வாரங்களுக்கு முன்னாடி கூட அவருடன் ஒரு விளம்பர படத்துக்காக பணிபுரிந்தேன். வாழ்க்கை கணிக்க முடியாததாக இருக்கிறது என்று வேதனை தெரிவித்தார். நடிகை நதியா,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள இரங்கல் பதிவில், என்னுடைய மேக்கப் கலைஞர் மற்றும் சிறந்த உள்ளம் கொண்டவர். என்னுடன் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி மற்றும் நிறைய விளம்பரப்படங்களில் பணிபுரிந்துள்ளார். என்று குறிப்பிட்டுள்ளார்.

Popular Makeup artist Babu passed away | பிரபல மேக்கப் கலைஞர் பாபுவின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல்

People looking for online information on Makeup Babu, Shanthnu will find this news story useful.