சர்ச்சைக்குள்ளான பெண் ரிப்போர்ட்டர் புகைப்படம்... பிரபல ஹீரோ மன்னிப்பு... என்ன நடந்தது..?
முகப்பு > சினிமா செய்திகள்மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் சமீபத்தில் 'வரனே அவசியமுண்டு" என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தானே தயாரித்தும் இருந்தார். இதில் இவருடன் ஷோபனா, சுரேஷ்கோபி, கல்யாணி பிரியதர்ஷன் போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் நல்ல வசூலை பெற்று தந்தது. சமீபத்தில் NETFLIXல் வெளியான இந்தப் படத்தை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் பெண் ரிப்போர்ட்டர் ஒருவரின் பதிவு துல்கருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்படத்தில் பெண் ரிப்போர்ட்டரை உடல் கேலி செய்யும் வகையில் ஒரு புகைப்படம் இருந்துள்ளது.
இதனை கவனித்த அவர் உடனடியாக பதிவிட்டுள்ளார். அதில் "இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. ஆனால் என்னையும் என் உடலையும் பொது தளத்தில் கேலி செய்வதை ஏற்க முடியாது. அந்த குறிப்பிட்ட புகைப்படம் என்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இதனைப் பார்த்த துல்கர் உடனடியாக அவருக்கு மன்னிப்பு பதில் எழுதியுள்ளார். அதில் "இந்த தவறுக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்கிறேன். எனது படத்தயாரிப்பு நிறுவனம் சார்பாக நடந்து இருக்கும் அந்த தவறுக்கு உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். இது வேண்டும் என்றே செய்தது இல்லை. இந்த புகைப்படம் எவ்வாறு படக்குழுவினருக்கு கிடைத்தது என்று தெரியவில்லை. எனவே மன்னித்துக் கொள்ளவும்" என்று கூறியுள்ளார். இந்த புகைப்படத்தால் மலையாள சினிமாவில் சர்ச்சை உருவாகியுள்ளது.
Dear @dulQuer @DQsWayfarerFilm
Thank you for the feature in your film but I’d like you to excuse me from body-shaming on a public forum. The concerned image was used without my consent & knowledge in your film. I’d like to claim ownership of the same. #VaraneAvashyamund pic.twitter.com/UnDYoDOc3B
— Chetna Kapoor (@chetnak92) April 20, 2020
We take full responsibility for the error on our behalf. Will look into it with concerned departments of the film to understand how the images were sourced. I apologise from my end and from the film as well as @DQsWayfarerFilm for any difficulties caused. It wasnt intentional.
— dulquer salmaan (@dulQuer) April 20, 2020