உலக புகழ்பெற்ற 'ஹாரி பாட்டர்' பிரபலம் அசத்தல்... கொரோனாவை 'இப்படி' தான் ஜெயிச்சேன்... !!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நோயின் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்கின்றனர். வெளியில் யாரும் வருவதில்லை. இந்த சூழ்நிலையில் பல அதிர்ச்சிகரமான, சோகமான செய்திகள் வெளிவந்தாலும் சில நம்பிக்கை அளிக்கும் செய்திகளும் கூடவே வெளிவருகின்றன. அப்படி ஒரு செய்தியை அப்படி ஒரு செய்தி தான் இது.

புகழ்பெற்ற ஹாரிபாட்டர் கதாபாத்திரத்தை உருவாக்கிய எழுத்தாளர் j.k. ரவுலிங்க்கும் கொரோனா நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் இன்று அவர் தான் முழுமையாக குணமாகி இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தான் இந்த முறையை கையாண்டால் தான் சீக்கிரம் குணமானேன் என்று வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அதில் மூச்சுப் பயிற்சி மூலம் நுரையீரலுக்கு சீரான காற்றினை பரவச் செய்வது எப்படி என்று மருத்துவர் விளக்கும் செய்முறை இருக்கிறது. நோய் வந்த பிறகு அல்ல, நோய் அறிகுறிகள் காணப்படும் போதே இந்த மூச்சுப் பயிற்சியை தினமும் செய்து வந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Please watch this doc from Queens Hospital explain how to relieve respiratory symptoms. For last 2 weeks I've had all symptoms of C19 (tho haven't been tested) & did this on doc husband's advice. I'm fully recovered & technique helped a lot.https://t.co/xo8AansUvc via @YouTube
— J.K. Rowling (@jk_rowling) April 6, 2020