www.garudabazaar.com

பிரபல நடிகைக்கு திருமணம் முடிந்தது... அவரே வெளியிட்ட புகைப்படங்கள்... வாழ்த்தும் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வருடம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது. இதனையடுத்து பலரும் தங்கள் திருமணம் மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைத்தனர். இந்நிலையில் ஊரடங்கு தற்போது தளர்வுபடுத்தப் பட்டுள்ள நிலையில் பல பிரபலங்களும் வரிசையாக தங்கள் திருமணம் பற்றிய செய்திகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2020-ல் வெளியான 'தர்பார்' என்ற படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. அதில் ரஜினியின் கேரக்டருக்கு உதவி செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிகை ஷமாதா அன்சான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

popular darabr actress got married பிரபல நடிகைக்கு திருமணம் முடிந்தது

இந்நிலையில் நடிகை ஷமாதா, கௌரவ் வர்மாவை பிப்ரவரி 8-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை தனது திருமணத்தை  குறித்து சமூக வலைதளங்களில் மனம் திறந்துள்ளார். ஷாமாதா அன்சான் தனது கணவர் கௌரவ் வர்மாவுடன் அழகிய திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் கூறும்போது "ஒரு வருடம் கழித்து, நாங்கள் ஒருவருக்கொருவர் எங்கள் எஞ்சிய வருடங்களை ஒன்றாக செலவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். நான் தனிப்பட்ட முறையிலும் மற்றும் வேலை ரீதியாகவும் மிகவும் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Tags : Darbar

தொடர்புடைய இணைப்புகள்

popular darabr actress got married பிரபல நடிகைக்கு திருமணம் முடிந்தது

People looking for online information on Darbar will find this news story useful.