Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

பாஜாகவில் இருந்து விலகிய தமிழ் பிக்பாஸ் பிரபலம்... எந்த கட்சியில் இணைந்துள்ளார் பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் மோகன் வைத்யா. இவர் இதற்க்கு முன்பு சேது, அந்நியன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் மர்ம தேசம், கோலங்கள், அலைகள் போன்ற பிரபல தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கர்நாடக இசைக்கலைஞரும் பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் மோகன் வைத்யா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாநில தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்த செய்தி மிகவும் வைரலானது.

popular biggboss contestant left BJP பாஜாகாவில் இருந்து விலகிய பிரபலம்

ஏனென்றால் அதற்கு வெகு முன்னர் தான் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ பாஜகவில் இணைந்தார். அண்ட் சமயத்தில் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பூக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்ததும் குறிப்பிடதக்கது. இந்நிலையில் அவரை தொடர்ந்து மோகன் வைத்தியாவும் பாஜகவில் இணைந்த செய்தி வைரலானது. இந்நிலையில் அவர் மீண்டும் தனது முடிவில் மாற்றம் தெரிவித்துள்ளார். மோகன் வைத்யா அக்கட்சியிலிருந்து விலகி டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இத்தேர்தலில் அமமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்

popular biggboss contestant left BJP பாஜாகாவில் இருந்து விலகிய பிரபலம்

People looking for online information on Mohan Vaidhya will find this news story useful.