www.garudabazaar.com

‘தளபதி’ விஜய் பிக்பாஸ் பாக்குறாரா?.. மாஸ் எண்ட்ரி கொடுத்த போட்டியாளரிடம் ஹவுஸ்மேட்ஸ் கேள்வி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நாடியா, சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி உள்ளிட்டோர் வெளியேறி இருக்கின்றனர்.

is vijay watching biggboss5 housemates asked to new contestent

முன்னதாக விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் திருநங்கை போட்டியாளரான நமிதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக பிக்பாஸ் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்டனர்.

is vijay watching biggboss5 housemates asked to new contestent

இதனிடையே முன்னதாக வெளியேற்றப்பட்ட அபிஷேக், மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அபிஷேக் வந்த பிறகும் கூட அடுத்தடுத்த வாரங்களில் பிரபல விஜய் டிவி கோரியோகிராஃபர் அமீர், பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்.

is vijay watching biggboss5 housemates asked to new contestent

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் நடிகர் விஜய்யின் நண்பரும், பிரபல நடிகரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான சஞ்சீவ் இணைவார் என்று ஏற்கனவே பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில் அதை நிஜமாக்கும் வகையில் புதிய புரோமோ வெளியாகி இருக்கிறது.

is vijay watching biggboss5 housemates asked to new contestent

அதன் படி பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் இயல்பாக இருந்து கொண்டிருந்தபோது சில ஊழியர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து சில ஏற்பாடுகளை செய்தனர். அதை பார்த்ததும் போட்டியாளர்கள் ஒருகணம் யோசித்து, ஆஹா.. யாரோ வர போகிறார்கள் என்று கூச்சலிட்டனர்.

is vijay watching biggboss5 housemates asked to new contestent

அப்போதுதான் மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகர் சஞ்சீவ். விஜய்யுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்த சஞ்சீவ், சின்னத்திரை தொடர்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். இதேபோல் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுமிருக்கிறார்.

is vijay watching biggboss5 housemates asked to new contestent

பிக்பாஸ் வீட்டுக்குள் சஞ்சீவ் வந்தவுடனேயே, “இமான் அண்ணாச்சி வந்தால்தான் நான் உள்ளே வருவேன்.. எங்கே அவர்!” என்று கேட்கத் தொடங்கினார். இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் எது நடந்தாலும் ரியாக்ட் பண்ண கூடாது என்கிற டாஸ்கில் இருப்பதாகக் கூற, அதற்கு சஞ்சீவ், “இப்பவாவது ரியாக்ட் பண்ணலாமே!?” என்று கேட்கத் தொடங்கினார். உடனே அனைவரும் ஆரவாரமாக கூச்சலிட்டு அவரை வரவேற்று கட்டித்தழுவிக் கொண்டனர்.

is vijay watching biggboss5 housemates asked to new contestent

அப்போது சிபி, சஞ்சீவை நோக்கி, “விஜய் சார் பிக்பாஸ் பார்க்கிறாரா?” என்று கேட்கிறார். சஞ்சீவ் சிரித்தபடி நிற்கிறார். இந்த புரோமோ தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் சஞ்சீவ் தளபதி விஜய்யுடன் பல படங்களில் நடித்தவர் என்பதும், நடிகர் சிபி தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

is vijay watching biggboss5 housemates asked to new contestent

People looking for online information on Master, Sanjeev, Thalapathy Vijay, Vijay, Vijay friend Sanjeev will find this news story useful.