சென்னையில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா? - அதிகாரப்பூர்வ தகவலை பகிர்ந்த பிரபல நடிகை
முகப்பு > சினிமா செய்திகள்தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறையின் சார்பில் வெளியிடப்படும் தகவல்கள் மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை மாநாகராட்சி தற்போது சென்னையில் கொரோனா பாதித்தோரின் விவரங்களை வட்டாரம் வாரியாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இன்றைய நிலவரப்படி சென்னையில் மொத்தம் 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல் கூறுகிறது.
இந்நிலையில் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகை கஸ்தூரி அதிக பாதுகாப்பாக இருங்கள் என்று எச்சரிக்கைவிடுத்துள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பாதித்தோரை தனிமைப்படுத்தி அவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
take care take extreme care #chennaicorona https://t.co/ABQfngmlWB
— Kasturi Shankar (@KasthuriShankar) April 3, 2020