www.garudabazaar.com

பிரபல நடிகையின் கணவர் கைது... பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.. போலீசில் புகார்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சர்ச்சை நடிகை மற்றும் மாடலான பூனம் பாண்டே சமீபத்தில்  திருமணம் செய்து கொண்டார். 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்றால் நிர்வாணமாக நடப்பேன் என்று கூறி  சர்ச்சையை ஏற்படுத்தியவர். இந்நிலையில் அவர் தனது நீண்ட கால காதலரான சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ரகசியமாக திருமணம் முடிந்தது.

Popular actress husband arrested for sexual abuse பிரபல நடிகையின் கணவர் கைது

ஆனால் தற்போது பூனம் பாண்டேவின் கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார். நடிகை போலீசில் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் கூறிய புகாரில் தனது கணவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், கொடுமை படுத்துவதாகவும், இதை எதிர்த்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். எனவே அவரது கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த செய்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular actress husband arrested for sexual abuse பிரபல நடிகையின் கணவர் கைது

People looking for online information on Arrest, Ponam pandey will find this news story useful.