கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எளிதில் பரவக்கூடிய நோய் என்பதால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை அறிவித்தார்.

இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற விஷயங்களுக்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது எனவும், அப்படி வெளியில் செல்ல நேர்ந்தால் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மக்கள் ஒருவருக்கொருவர் குறைந்தது 1 மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும், தொட்டு பேசுதல் கூடாது, கைகளை நன்றாக கழுவ வேண்டும் போன்ற வழிமுறைகள் மக்களுக்கு கூறப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் தற்போது உச்ச கட்டத்தை அடைந்து வரும் நிலையில் இதனை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.
இதற்கிடையே பிரபலங்களின் பதிவுகள் அடிக்கடி வைரலாவது வழக்கமாகியுள்ளது. அதன் படி நடிகை பூனம் பாண்டே தனது காதலருக்கு மாஸ்க் அணிந்து முத்தம் கொடுக்கும் ஃபோட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.