www.garudabazaar.com

அந்த தமிழ்ப்பட நடிகருக்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. I.C.U-வில் அனுமதி. விவரம் என்ன..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகருக்கு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பிரபல நடிகருக்கு ஏற்பட்ட விபத்து | Popular actor tovino thomos met with accident

மலையாள சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் டொவினோ தாமஸ். இவர் நடித்துள்ள தீவண்டி, மாயநதி, வைரஸ், ஃபாரன்சிக் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும் இவர் தமிழில் தனுஷ் நடித்த மாரி-2 திரைப்படத்தில் நடித்தார். 

பிரபல நடிகருக்கு ஏற்பட்ட விபத்து | Popular actor tovino thomos met with accident

இந்நிலையில் தற்போது டொவினோ தாமஸ்-க்கு படிப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிய வந்துள்ளது. தற்போது அவர் மலையாளத்தில் கலா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்று இப்படத்திற்கு ஒரு சண்டை காட்சியை படமாக்கும் போது, எதிர்ப்பாரத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவரின் வயிற்றில் பலமான காயம் ஏற்பட, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வந்துள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல நடிகருக்கு ஏற்பட்ட விபத்து | Popular actor tovino thomos met with accident

People looking for online information on Maari 2, Tovino Thomas, Tovino Thomas Accident will find this news story useful.