www.garudabazaar.com

திடீரென்று வெளியேறிய சனம்... ஆதரவாக பதிவிட்ட பிரபல நடிகர்... "ஓட்டு தான் காரணமா?"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்  கடுமையான போட்டியாக கருதப்பட்ட நடிகை சனம் போட்டியில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. காரணம் மனதில் பட்டதை நேர்மையாகவும் தைரியமாகவும் கூறும் பழக்கம் உடையவர் சனம் செட்டி. இதனால் அந்த வீட்டில் சிலரது எதிர்ப்பை சம்பாதித்தாலும், மக்கள் அவரை பல சமயங்களில் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக் வைரலானது.

popular actor post on support for sanam சனம் ஆதரவாக பதிவிட்ட பிரபல நடிகர்

இந்நிலையில் இதுபற்றி முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களும், நடிகர், நடிகைகளும் சனத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகரும், நடன அமைப்பாளருமான சதீஷ் தற்போது தனது கருத்தை பதிவு செய்து உள்ளார். அவர் கூறும் பொழுது "சனத்தை போட்டியில் இருந்து நீக்கி இருக்கக் கூடாது. தாமதமாக சொல்கிறேன் என்று எனக்கு தெரியும். ஆனால் அவர் இந்த எவிக்ஷனிற்கு தகுதியானவர் அல்ல. ஓட்டு தான் காரணமா? மேலும் உண்மையாக சொல்கிறேன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு யாரும் இவ்வளவு மாஸாக வெளியே சென்றதில்லை" என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

திடீரென்று வெளியேறிய சனம்... ஆதரவாக பதிவிட்ட பிரபல நடிகர்... "ஓட்டு தான் காரணமா?" வீடியோ

popular actor post on support for sanam சனம் ஆதரவாக பதிவிட்ட பிரபல நடிகர்

People looking for online information on Biggboss4tamil, Sanam will find this news story useful.