பிரபல பிக்பாஸ் நடிகை மீது நடிகர் பரபரப்பு புகார் - எனது பெயரை கெடுக்க பார்க்கிறார்...!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல டிவி நடிகர் மற்றும் ரியாலிட்டி ஷோ புகழ் மயூர் வர்மா சைபர் க்ரைமில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். ஹிந்தி பிக்பாஸ் 13-ஆம் சீசனில் பங்குகொண்ட தேவலோனா பட்டாச்சாரியா தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக குற்றச்சாட்டினை எழுப்பியுள்ளார்.

இதுபற்றி தனது டிவிட்டர் தளத்தில் பதிவிட்ட அவர் "விஷயம் மோசமாகிக் கொண்டே போகிறது. அதனால் தான் இதை சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டேன். இனி எல்லாம் அவர்கள் கையில்தான் இருக்கிறது. போலீசார் சரியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
போலீஸ் புகாரின் நகலை இணைத்து அவர் மேலும் கூறியது "ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை எனது பெயரை அவர் கெடுக்க பார்க்கிறார். டிவிட்டரில் என்னை பற்றிய தவறான பதிவுகளை லைக் செய்து வருவதும் எனக்குத் தெரியும். தேவலோனா மற்றும் அவரது ரசிகர்களால் நான் கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளேன். இனி என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் பெயர் மதிப்பிழப்பதாக உணர்கிறேன். அதனால்தான் புகார் எழுப்பினேன்" என்று பரபரப்பாக கூறியுள்ளார்.
Things were too much
So I have given it to cybercrime now
Now everything is in the hands of cybercrime
I believe cybercrime will take action soon#TimeToStopIt pic.twitter.com/Y6vS6ANGxn
— Mayaur Verma (@mayurvermaa) May 24, 2020