Jai been others
www.garudabazaar.com

போடு.. தரமான சம்பவம்.. பாட்ஷாவுக்கு பிறகு ரஜினிக்கு டப்பிங் பேசும் பிரபல நடிகர்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

Popular actor Dubbed for Rajini Annathe film kannada version

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, வேல ராமமூர்த்தி, ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் தொடங்கி டிரெய்லர் வரை அனைத்தும் வெளியாகிவிட்ட நிலையில், படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. பன் மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்திம் கன்னட மொழி பதிப்பும் வெளியாகவிருக்கிறது.

இந்தநிலையில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தின் கன்னட மொழி பதிப்புக்கு ரஜினிகாந்த் கதாபாத்திரத்திற்கு நடிகர் சாய் குமார் குரல் கொடுத்திருக்கிறார் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது.

Popular actor Dubbed for Rajini Annathe film kannada version

நடிகர் சாய் குமார் ரஜினி நடித்த பாட்ஷா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ரஜினிக்கு குரல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து நடிப்பில் பிஸியாகிவிட, பாடகர் மனோ தான் ரஜினிக்கு தெலுங்கு படங்களில் டப்பிங் பேசி வந்தார். இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த படத்தின் கன்னட வெர்ஷனுக்கு சாய் குமார் டப்பிங் கொடுக்கிறார். 

அண்மையில் வழக்கமான உடற் பரிசோதனை காரணமாக சென்னை காவிரி மருத்துவமனை சென்று ரஜினிகாந்த் பரிசோதனை மற்றும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கிறார்.

இதனையடுத்து உற்சாகமாகி இருக்கிற ரசிகர்கள், தீபாவளியை ஒட்டி வரும் நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக 100 சதவீத இறக்கைகளுடன் வெளியாகவுள்ள அண்ணாத்த திரைப்படத்தை காண்பதற்கு ஆவலாக இருக்கின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Popular actor Dubbed for Rajini Annathe film kannada version

People looking for online information on Annaatthe, Petta, Rajinikanth, Sai Kumar will find this news story useful.