Jai been others
www.garudabazaar.com

VIDEO: வெளியானது பாகுபலி ராஜமௌலி இயக்கும் RRR படத்தின் பரபரப்பான Glimpse வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி, பாகுபலி-2 படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வரவிருக்கும் படம் "RRR".

Glimpse of RRR Movie the glory of Indian Cinema

தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. இதில் ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Glimpse of RRR Movie the glory of Indian Cinema

ராஜ மௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சாபுசிரில் கையாள்கிறார். அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் வெளியீடு, சில காரணங்களால் தள்ளிப்போனது.

Glimpse of RRR Movie the glory of Indian Cinema

இந்த RRR படம் அடுத்த வருடம் 2022 ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகிறது. தல அஜித்தின் வலிமை படமும் பொங்கலுக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபாஸின் ராதேஷ்யாம், பவன் கல்யானின் பீம்லா நாயக், மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பட்டா படங்களும் பொங்கல் மஹா சங்கராந்திக்கு வருகின்றன.

Glimpse of RRR Movie the glory of Indian Cinema

இந்நிலையில் இந்த படத்தின் 40 நொடி முன்னோட்ட கிளிம்ஸ் வீடியோ இன்று நவம்பர்  1 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி படத்தின் படத்தின் பரபரப்பான கிளிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. செபியா டோனில் படத்தின் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும், பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளன. இந்த கிளிம்ஸ் வீடியோ வெளியான சில மணி நேரங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை எட்டி உள்ளது.

 

VIDEO: வெளியானது பாகுபலி ராஜமௌலி இயக்கும் RRR படத்தின் பரபரப்பான GLIMPSE வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Glimpse of RRR Movie the glory of Indian Cinema

People looking for online information on Ajay devgan, Alia Bhatt, Glimpse, Jr ntr, Raja Mouli, Ram Charan, RRR, RRR Movie will find this news story useful.