www.garudabazaar.com

பிரபல நடிகை 36 வயதில் மரணம் அடைந்தார்... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2020 ஆம் வருடத்தில் பல சினிமா நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் அடுத்தடுத்து மரணித்து வருவது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலமான தென் கொரிய நடிகை ஓ இன்-ஹை திங்களன்று மேற்கு துறைமுக நகரமான இன்சியோனில் உள்ள அவரது வீட்டில் சுயநினைவின்றி கண்டுபிடிக்கப்பட்டார். 36 வயதான அவரை காலை 5 மணிக்கு போலீசார் மீட்டனர். பின்னர் அவர் இன்சியான் இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

Popualr actress dies at the age of 36 by suicide பிரபல நடிகை 36 வயதில் மரணம் அடைந்தார்

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் அவருக்கு சி.பி.ஆர் உள்ளிட்ட அவசர சிகிச்சை முறைகள் கொடுக்கப்பட்டன. தற்கொலை முயற்சிக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் அவர் இன்று மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தி உலகம் முழுவது இருக்கும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மனஅழுத்தம் மேலிடும் போது மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை தொடர்பு கொண்டு இலவச ஆலோசனை பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

Popualr actress dies at the age of 36 by suicide பிரபல நடிகை 36 வயதில் மரணம் அடைந்தார்

People looking for online information on Actress, Death, Oh In-hye, Suicide will find this news story useful.