'தெய்வமகள்' நடிகையின் ஐடியாவின் பேரில் சொந்த வீட்டிலேயே பூட்டை உடைத்து திருடிய காதலர்
முகப்பு > சினிமா செய்திகள்சன் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' சீரியலில் அகிலா என்ற வேடத்தில் நடித்தவர் சுசித்ரா. இவர் மீது தனது சொந்த வீட்டிலேயே திருடியதாக காவல்துறையினர் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த விவசாயி தேசிங்கு தனது மனைவியுடன் தோட்டத்திற்கு சென்ற போது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து 50 ஆயிரம் பணம் மற்றும் 18 பவுன் நகை கொள்ளை போனதாக பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் போலீஸாரின் தீவிர விசாரணையில் தேசிங்கு மகன் மணிகண்டனின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்துள்ளது. அவரை விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை விவகாரத்து செய்து விட்டு சென்னைக்கு சென்ற மணிகண்டன் சீரியல் நடிகர், நடிகைகளை படப்பிடிப்புக்கு அழைத்துச்செல்லும் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்போது அவருக்கு டிவி நடிகை சுசித்ராவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்து சேர்ந்து வாழ்ந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் செலவுக்கு பணம் இல்லாததால் மிகுந்த கஷ்டத்தில் இருந்துள்ளனர். இதனையடுத்து சுசித்ராவை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார் மணிகண்டன். அப்போது வீட்டில் நிறைய பணம் நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் நகை பணத்தை கொண்டு ஷார்ட் ஃபிலிம் எடுத்து வெளியிடலாம் என மணிகண்டனுக்கு சுசித்ராவிற்கு ஐடியா கொடுத்துள்ளார். பின்னர் சுசித்ராவை சென்னையில் விட்டு வந்து மணிகண்டன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
மணிகண்டன் போலீஸில் சிக்கியது தெரிந்ததும் சுசித்ரா தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது. போலீஸின் விசாரணையில் சுசித்ராவின் நிஜப் பெயர் பரமேஸ்வரி என்பது தெரியவந்துள்ளது. தற்போது சுசீத்ராவை தேடி போலீஸார் சென்னை விரைந்துள்ளனர்.
'தெய்வமகள்' நடிகையின் ஐடியாவின் பேரில் சொந்த வீட்டிலேயே பூட்டை உடைத்து திருடிய காதலர் வீடியோ