Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

தியேட்டரில் பட்டையை கிளப்பிய பொன்னியின் செல்வன்.. PS1 படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

Ponniyin Selvan PS1 Movie World Wide Box Office Collection 200 Crores

Also Read | பிரபல தியேட்டரில் PS1 நடிகர்களுடன் படம் பார்த்த ஐஸ்வர்யா ராய்.. கூட இவங்க வேற இருக்காங்களா?

இயக்குனர்  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார்.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் படம், IMAX 3டி வடிவத்திலும் ரிலீஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் ஆரவாரத்தோடு தமிழகம் முழுவதும் பெரு நகரங்களில் முதல் காட்சி திரையிடப்பட்டது. அதன் பின்னர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியதை அடுத்து அடுத்தடுத்த நாட்களில் அதிகாலை 2 மணிக்கு கூட சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. ஞாயிறு அன்றும் அதிகாலை 2 மணிக்கும் 5 மணிக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Ponniyin Selvan PS1 Movie World Wide Box Office Collection 200 Crores

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.

இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Ponniyin Selvan PS1 Movie World Wide Box Office Collection 200 Crores

இந்நிலையில் முதல் நாளில் பொன்னியின் செல்வன் படம் 80 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் படம் அமைந்துள்ளது. இந்நிலையில் 3 நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது என அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் படநிறுவனம் அறிவித்துள்ளது.

Also Read | செம! புது வீடு கட்டி பால் காய்ச்சிய நடிகை நந்திதா ஸ்வேதா..! எந்த ஊர்ல? வைரல் போட்டோஸ்

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan PS1 Movie World Wide Box Office Collection 200 Crores

People looking for online information on AR Rahman, Maniratnam, Ponniyin Selvan Box Office Collection, Ponniyin Selvan part 1 will find this news story useful.