www.garudabazaar.com

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாட்டு எப்போ ரிலீஸ்? யாரு பாடியிருக்கா? எழுதுனது யார்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டருடன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Ponniyin Selvan Movie First Single Ponni Nathi Song Details

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

Ponniyin Selvan Movie First Single Ponni Nathi Song Details

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் & டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

Ponniyin Selvan Movie First Single Ponni Nathi Song Details

இந்நிலையில் இன்று பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் 'பொன்னி நதி' நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. A R ரஹ்மான் குரலில் இந்த பாடல் அமைந்துள்ளது.  பாடலை பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் எழுதி உள்ளார்.

'பொன்னியின் செல்வன்' படத்தின் அனைத்து மொழி (தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம்) ஆடியோ இசை உரிமைகளையும் மும்பையை தலைமையிடமாக கொண்ட  டிப்ஸ் (TIPS) நிறுவனம்  கைப்பற்றியுள்ளது என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ponniyin Selvan Movie First Single Ponni Nathi Song Details

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Movie First Single Ponni Nathi Song Details

People looking for online information on A R Rahman, Karthi, Maniratnam, Ponniyin Selvan, PS1 will find this news story useful.