www.garudabazaar.com

எங்களால 'இதெல்லாம்' பாக்க முடியல... பேசாம அப்படி 'செஞ்சுடுங்க' பாஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கால அட்டவணை என்ற பெயரில் டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் அளித்ததை கண்டு, சில்லறையை சிதறவிட்ட ரசிகர்கள் எல்லாம் செம காண்டாகி இருப்பார்கள். ஏனென்றால் டாஸ்க் அப்படியொரு மொக்கையாக இருந்தது. டாஸ்க் கொடுத்தால் நன்றாக இருக்கும் என சொன்னது ஒரு குத்தமா பாஸ்? இதுக்கு நீங்க டாஸ்க் எதுவும் குடுக்காம இருந்திருந்தா, அவங்களே நல்லதா நாலு கண்டெண்ட் கொடுத்து இருப்பார்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

'Please give Tough tasks' Fans requested to Bigg Boss

அர்ச்சனா-நிஷா குழாயடி சண்டை, அனிதா பெர்பாமன்ஸ் ஆகியவை மட்டுமே நேற்றைய நிகழ்ச்சியை சற்றேனும் தாங்கி பிடித்தன. இல்லையெனில் பயங்கர போரிங்காக இருந்திருக்கும். போட்டியாளர்கள் 5 அணிகளாக பிரிந்தாலும் கூட பெரிதாக எந்தவொரு உரசலும் இல்லை. அதேபோல மருந்துக்கு கூட சண்டை எதுவும் இல்லை. போதாதற்கு சனமின் காட்சிகளை வேறு எடிட்டிங் டீமில் கட் செய்து விட்டனர் போல. இதைப்பார்த்த சனம் ஆர்மி எங்களுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? என தனியாக தாளித்து வருகின்றனர்.

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டெண்ட் எதுவும் இல்லனா பேசாம ஒரு 3 நாள் லீவ் விட்ருங்க பாஸ். எங்களால இந்த மாதிரி மொக்கை எல்லாம் பாக்க முடியல என பிக்பாஸுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். வேறு சிலரோ தெலுங்கு பிக்பாஸில் வேற லெவலில் கிரியேட்டிவாக டாஸ்க் கொடுத்து வருகின்றனர். அதுபோல தமிழிலும் நல்ல டாஸ்க்காக கொடுங்கள். இப்படியே நாட்களை ஓட்டி விடாதீர்கள் என தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

'Please give Tough tasks' Fans requested to Bigg Boss

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.