Reliable Software
www.garudabazaar.com

Video: உடைந்து அழுத பவித்ரா.. அடுத்த நொடியே ஷகிலாவின் நெஞ்சை உருக்கும் செயல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் முதன்மையான ரியாலிட்டி ஷோவாகவும் அனைத்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் மாறியிருக்கிறது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்கு வித் கோமாளி ரியாலிட்டி ஷோ.

Pavithra cries shakila heart melt announcement cook with comali

பல டிவி சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களை புதிதாக அறிமுகப்படுத்தினாலும் கூட குக் வித் கோமாளி ஷோவை அடித்துக் கொள்ளவே முடியவில்லை என்கிற அளவுக்கு, இந்த ஷோ மிகவும் பாப்புலர் ஆகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த ஷோவை விரும்பி பார்க்கவும் திரும்பிப் பார்க்கவும் தொடங்கியுள்ளனர். சின்னத்திரையில் சீரியல்கள் மட்டுமே ஒரே பொழுதுபோக்காக இருந்த நிலையில் சின்னத்திரையில் இப்படி ஜாலியான பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாவது அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகைகள், நடிகர்கள் அடுத்தடுத்த வளர்ச்சியை எட்டி விடுகிறார்கள். இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை சிலர் குக்குகளாகவும் சிலர் கோமாளிகள் ஆகவும் வருகின்றனர். சின்னத்திரை நடிகர், நடிகையர் போன்ற பிரபலங்கள் உட்பட வெள்ளித்திரையில் நடித்த ஷகிலா வரை இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் பிரபலங்களுக்கு ஒரு புதிய அடையாளங்களை இந்த நிகழ்ச்சி தற்போது உருவாக்கிக் கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் செய்யும் கலாட்டா, சேட்டைகள் உள்ளிட்ட அனைத்தும் இந்த நிகழ்ச்சியின் பாசிட்டிவான ரீச்சுக்கு இன்னும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைத்து போட்டியாளர்களும் ஒரு குடும்பம் போல நடந்து கொள்வது இந்த நிகழ்ச்சியின் மற்றுமொரு ப்ளஸ். அந்த வகையில் இந்த வாரம் போட்டியாளர்களும் அனைவரும் குடும்பத்தினருடன் தற்போது ஒளிபரப்பான எபிசோடில் கலந்து கொள்ள அதில் நடிகை பவித்ரா லட்சுமி மட்டும்,  தன்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் கலந்து கொள்ள முடியவில்லை, அவர்களை மிஸ் பண்ணுவதாகக் கூறி அழத் தொடங்கிவிட்டார்.

அவர் அவ்வாறு அழுத வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனிடையே இந்த நிகழ்ச்சியில் அவருடைய அழுகையை பார்த்ததுமே சக போட்டியாளர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர். அப்போது திடீரென அங்கு ஷகிலா, “இது என்னுடைய இரண்டாவது மகள். எனது 2வது மகளை இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் அறிமுகப்படுத்துகிறேன்” என பவித்ராவை கட்டிப்பிடித்து கூறினார்.

யாரும் எதிர்பாராத நேரத்தில் ஷகிலா இவ்வாறு செய்ததை அடுத்து அனைவரும் செய்வதறியாது சந்தோஷத்தில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பவித்ராவும் தன் அழுகையை மறந்து சிரிக்க தொடங்கிவிட்டார். இந்த வீடியோவை பார்த்த பலரும் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை செப் தாமோதரனை அனைவரும் அப்பா என்று சொல்வதும் ஷகிலாவை அனைவரும் மம்மி என்று அழைப்பதும் சிவாங்கியை சிவாங்கி பாப்பா என்று அழைப்பதும் பிரபலம். இந்த நிகழ்ச்சியில் ஷகிலாவின் மகளான மிலாவும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.‌

ALSO READ: திருமணக் கோலத்தில் பவித்ரா - சுதர்ஷன்.. புகழ் மாதிரியே ஷாக் ஆன அவரது ரசிகர்கள்!

VIDEO: உடைந்து அழுத பவித்ரா.. அடுத்த நொடியே ஷகிலாவின் நெஞ்சை உருக்கும் செயல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Pavithra cries shakila heart melt announcement cook with comali

People looking for online information on CookWithComali, Mila, Pavithra Lakshmi, Shakila, Trending, VijayTelevision will find this news story useful.