www.garudabazaar.com

Navarasa: "மறந்துட்டீங்களோ?".. நவரசா.. வெளியான கொல மாஸ் டிரைலர்! சம்பவம் loading-னு நல்லா தெரியுது! Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முன்னணி இந்திய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மணிரத்னம் மற்றும் இயக்குநர் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து தயாரித்துள்ள, ஒன்பது பாகம் கொண்ட ஆந்தாலாஜி திரைப்படம் "நவரசா".

Navarasa official trailer is out netflix anthology maniratnam

Netflix தளத்தில் 2021 ஆக்ஸ்ட் 6 அன்று வெளியிடப்படும் இந்த படத்தை தமிழ் சினிமாவின் 9 முன்னணி இயக்குநர்கள் இயக்க, முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

Navarasa official trailer is out netflix anthology maniratnam

மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்ட, ஒன்பது கதைகள் கொண்ட ஆந்தாலஜி திரைப்படமாக உருவாகியுள்ளது இந்த படம்.

Navarasa official trailer is out netflix anthology maniratnam

இப்படத்தில், கொடிய நோய்தொற்று பரவலால் முடங்கியிருக்கும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், எந்த ஊதியமும் இல்லாமல், சுய விருப்பத்தின்பேரில் அனைவரும் பணிபுரிந்துள்ளார்கள்.

Navarasa official trailer is out netflix anthology maniratnam

இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில், தற்போது இந்த படத்தின் மாஸ் டிரைலர் வெளியாகியுள்ளது.

படம், நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் விபரங்கள்:

தயாரிப்பாளர்கள்  - மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன்

1. தலைப்பு  - எதிரி (கருணை)

   இயக்குநர் - பெஜோய் நம்பியார்

   நடிகர்கள் - விஜய் சேதுபதி , பிரகாஷ் ராஜ், ரேவதி

2. தலைப்பு  -  சம்மர் ஆஃப்  92 ( நகைச்சுவை )

   இயக்குநர் - ப்ரியதர்ஷன்

   நடிகர்கள் - யோகி பாபு,  ரம்யா நம்பீசன் நெடுமுடி வேணு

3. தலைப்பு  -புராஜக்ட் அக்னி  (ஆச்சர்யம்)

  இயக்குநர் - கார்த்திக் நரேன்

   நடிகர்கள் - அர்விந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா

4. தலைப்பு  - பாயாசம் ( அருவருப்பு )

   இயக்குநர் - வசந்த் S  சாய்

   நடிகர்கள் - டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன், செல்ஃபி கார்த்திக்

5. தலைப்பு  - அமைதி ( அமைதி )

   இயக்குநர் - கார்த்திக் சுப்புராஜ்

   நடிகர்கள் - சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண்

6. தலைப்பு  - ரௌத்திரம் ( கோபம் )

   இயக்குநர் - அர்விந்த் சுவாமி

   நடிகர்கள் - ரித்விகா ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ, ரமேஷ் திலக், கீதா கைலாசம்

7. தலைப்பு  - இண்மை  ( பயம் )

   இயக்குநர் - ரதீந்திரன் R பிரசாத்

   நடிகர்கள் - சித்தார்த், பார்வதி  திருவோர்து

8. தலைப்பு  - துணிந்த பின் (தைரியம்)

   இயக்குநர் - சர்ஜூன்

   நடிகர்கள் - அதர்வா, அஞ்சலி, கிஷோர்

9. தலைப்பு  - கிடார் கம்பியின் மேலே நின்று  ( காதல் )

   இயக்குநர் - கௌதம் வாசுதேவ் மேனன்

   நடிகர்கள் - சூர்யா, ப்ரயகா ரோஸ் மார்டின்

ALSO READ: 'சூர்யாவின்' அயன்!.. அப்படியே "கண்முன் நிறுத்திய" fans! சூர்யா என்ன சொல்லிருக்காரு பாருங்க! Video

Navarasa official trailer is out netflix anthology maniratnam

People looking for online information on Arvind Swami, Mani Ratnam, Navarasa, Siddharth, Suriya, Vijay Sethupathi will find this news story useful.