Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

'மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு' .. 'அண்ணாத்த' ரிலீஸ் எப்போ? ரஜினி Fansக்கு 'தரமான' அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் தொடங்கியுள்ளது.

Rajinikanth Annaatthe release update ரஜினிகாந்த் அண்ணாத்தே

கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி  நடந்துவந்தது. ஆனாலும் படக்குழுவினரில் 4  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து படக்குழுவினர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர்.

படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினியும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை, அதே சமயம் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி சிகிச்சை முடிந்த பின்னர் வீடு திரும்பினார்.

கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியன் மற்றும் பலர் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்குய் டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ரிலீசும் 2021 தீபாவளி என்றும் தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்த ரிலீஸ் விவரம் ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்.

ALSO READ:  “காலையில 5 மணிக்கே அலாரம் வெச்சு..”.. புலம்பித் தள்ளிய கணவர்.. ஆரிக்கு இப்படி ஒரு ரசிகையா? ViralVideo

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth Annaatthe release update ரஜினிகாந்த் அண்ணாத்தே

People looking for online information on Annaatthe, Rajinikanth, Siruthai Siva will find this news story useful.