பாண்டியன் ஸ்டோர்ஸ் VJ Chithu-க்கு நடந்த ஏமாற்றம்.. நடிகை கொடுத்த ஷாக்கிங் தகவல்.!!
முகப்பு > சினிமா செய்திகள்பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் சித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிருப்தியான தகவலை தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி விஜேவாக தனது பயணத்தை தொடங்கியவர் சித்ரா. இதை தொடர்ந்து இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தார். மேலும் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார். தற்போது இவர் நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் திரைப்படம், இவருக்கென தனி ரசிகர்களை கொடுத்துள்ளது.
இந்நிலையில் நடிகை சித்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த போது, ஏன் நீங்கள் ஸ்டார் ஜோடிகள் ஷோவில் பங்கேற்கவில்லை என ஒருவர் கேட்டதற்கு பதில் கொடுத்த சித்து, ''முதலில் என்னை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்தார்கள். நான் அதில் டான்ஸ் ஆட ஆர்வமாகி, எனது காஸ்ட்யூம், பாடல் என அனைத்தையும் தயார் செய்தேன். ஆனால், கடைசி நேரத்தில், நீங்கள் இப்போது இதில் பங்குபெறுவது சரியாக இருக்காது. உங்களுக்கான நேரம் கண்டிப்பாக வரும். இப்போது நாங்கள் உங்களுக்காக வருத்தப்படுகிறோம்'' என தெரிவித்தனர் என அவர் கூறியுள்ளார்.
மேலும், ''இதை முதலில் கேட்டபோது என கொஞ்சம் அதிருப்தியாக இருந்தது. பிறகு சரியாகி விட்டது. நான் எனது சொந்த முயற்சியில் இந்த தூரத்திற்கு வந்திருக்கிறேன். எனக்காக யாரும் வருத்தப்பட வேண்டாம். என்னை நினைத்து நான் எப்போதுமே பெருமை கொள்கிறேன்'' என அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் சித்து, தனது திருமண நிச்சயதார்த்தம் முடிந்து, அந்த புகைப்படத்தையும் ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.தொழிலதிபர் ஹேமந்த் என்பவரை இவர் திருமணம் செய்யவுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் VJ CHITHU-க்கு நடந்த ஏமாற்றம்.. நடிகை கொடுத்த ஷாக்கிங் தகவல்.!! வீடியோ