www.garudabazaar.com

தனுஷின் ஜகமே தந்திரம் OTT ரிலீஸ்.?!, தயாரிப்பாளருக்கு க்ரீன் சிக்னல்.?! - Exclusive Report.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து வரும் செய்திகள் பற்றி முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. 

தனுஷின் ஜகமே தந்திரம் OTT ரிலீஸ்.? விவரம் என்ன.?! | Clarification on Dhanush Karthik Subbaraj's Jagame Thandhiram OTT Release News

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இத்திரைப்படத்தில் ஐஷ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஜொஜு ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை Ynot Studio நிறுவனம் தயாரித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மே 1 ரிலீஸ் ஆக வேண்டிய இத்திரைப்படம் தள்ளிப்போனது. 

இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தை ஆன்லைன் தளமான நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ் செய்ய தனுஷ் சம்மதித்து விட்டதாகவும், தயாரிப்பாளர் நஷ்டமடைய கூடாது என அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து நடிகர் தனுஷின் நெருங்கிய வட்டாரங்களிடம் இதுகுறித்து விசாரித்தபோது, இது முற்றிலும் ஒரு பொய்யான செய்தி. ஜகமே தந்திரம் படத்தை இப்போது OTT-ல் ரிலீஸ் செய்வதாக சொல்லப்படுவது எல்லாம் வதந்தி'' என திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர். ஆக, ரசிகர்களின் விருப்பப்படி, படம் தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.! 

தனுஷின் ஜகமே தந்திரம் OTT ரிலீஸ்.? விவரம் என்ன.?! | Clarification on Dhanush Karthik Subbaraj's Jagame Thandhiram OTT Release News

People looking for online information on Dhanush, Jagame Thanthiram, Karthik Subbaraj, Netflix, OTT Release will find this news story useful.