www.garudabazaar.com

Beast: அரபிக்குத்து பாட்டுக்கு குத்து டான்ஸ்.. சீரியல் நடிகைகள் லெட்சுமி - அக்ஷிதாவின் வைரல் VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாட்டுக்கு நடிகைகள்  லட்சுமி, அக்ஷிதா அசோக் செம்ம குத்து நடனம் ஆடி உள்ளார்.

oorvambu Laxmi akshitha ashok dancing arabic kuththu dance

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

oorvambu Laxmi akshitha ashok dancing arabic kuththu dance

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். 195 மில்லியன் வியூசை இந்த பாடல் கடந்துள்ளது.

oorvambu Laxmi akshitha ashok dancing arabic kuththu dance

மேலும் இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே, நெல்சன் மகன் ஆத்விக், திவ்யபாரதி, சஞ்சனா, ஷிவானி நாராயணன், கீர்த்தி சுரேஷ், சுஜிதா, கனிகா, யுவன் சங்கர் ராஜா, சம்யுக்தா ஹெக்டே, ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்தனர்.

oorvambu Laxmi akshitha ashok dancing arabic kuththu dance

இந்நிலையில் சீரியல் நடிகைகள் லட்சுமி, அக்ஷிதா அசோக் ஆகியோர் செம குத்து டான்ஸ் ஆடி உள்ளனர்.  நடிகை லட்சுமி, அகல்யா, சூப்பர் சுந்தரி, வம்சம், செம்பருத்தி, வீட்டுக்கு வீடு லூட்டி, ராஜகுமாரி, ஊர்வம்பு ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அன்பே வா, காற்றுக்கென்ன வேலி, சாக்லேட் மற்றும் சித்தி 2 ஆகிய சீரியல்களில் அக்ஷிதா அசோக் நடித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

oorvambu Laxmi akshitha ashok dancing arabic kuththu dance

People looking for online information on Akshitha ashok, Arabic Kuthu, Beast, Laxmi, Oorvambu Laxmi, Vijay will find this news story useful.