www.garudabazaar.com

One Year of MASTER: கொல மாஸான BTS புகைப்படத்தை பகிர்ந்து கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்! செம டிரெண்டிங்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: மாஸ்டர் படம் வெளியாகி ஒரு வருடம் ஆவதை ஒட்டி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டிவிட்டரில் BTS புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

One Year of Master Lokesh Kanagaraj Shares BTS Image

Master

நடிகர் விஜய் கடைசியாக நடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்தார். கடந்த 2020 ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம், ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. பின் மாஸ்டர் படம் கடந்த வருடம் ஜனவரி 13 பொங்கல் அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. இந்த படத்தை விஜய்யின் மாமாவான சேவியர் பிரிட்டோ தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

One Year of Master Lokesh Kanagaraj Shares BTS Image

 

சாய்னா நேவாலை பாலியல் ரீதியாக திட்டிய விவகாரம்: சித்தார்த் மீது POLICE வழக்குப் பதிவு

Master - JD

விஜய்யின் ஜேடி கதாபாத்திரமும், விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரமும் ரசிகர்களீடம் பிரபலமடைந்தது. வில்லனுக்கு ஹீரோவை விட அதிக முக்கியத்துவம் உள்ள தமிழ் படங்களில் மாஸ்டரும் ஒன்று. பவானி கதாபாத்திரம் பல இடங்களில் ஜேடி கதாபாத்திரத்தை மிஞ்சும் வகையில் மாஸ்டர் படம் இருக்கும். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த மாஸ்டர் படம் 2021 வருடத்தில் வெளியான படங்களின் IMDb பட்டியலில் 4வது இடத்தை பிடித்தது.   கூகுளில் இந்த வருடம் 2021ல் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்களில் 6வது இடத்தை விஜய் - விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் படம் பெற்றது.  ஜெய்பீம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் விஷ்ணுவர்தன் இயக்கிய ஷேர்ஷா படமும், 3-வது இடத்தை சல்மான்கானின் ராதே படமும் பிடித்தன.

One Year of Master Lokesh Kanagaraj Shares BTS Image

"5வது படிக்குறப்பவே ரஜினி படத்துக்கு SONG எழுதுனேன்"..துல்கர்‌ சல்மான பட இயக்குநர் நெகிழ்ச்சி!

BTS 

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து இதுவரை வெளிவராத BTS Behind The Scene புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதியும் படத்தின் BTS வீடியோவை வெளிட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. படத் தயாரிப்பு நிறுவனமும் ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த BTS புகைப்படத்தில் லோகேஷ், விஜய்க்கு படத்தின் முன் இண்டர்வெல் காட்சியை விளக்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

One Year of Master Lokesh Kanagaraj Shares BTS Image

One Year of Master Lokesh Kanagaraj Shares BTS Image

People looking for online information on லோகேஷ் கனகராஜ், விஜய், BTS Image, Lokesh Kanagaraj, Master Movie, One Year of Master will find this news story useful.