www.garudabazaar.com

"5வது படிக்குறப்பவே ரஜினி படத்துக்கு SONG எழுதுனேன்"..துல்கர்‌ சல்மான பட இயக்குநர் நெகிழ்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பாட்ஷா படம் வந்து நேற்றுடன் 27 வருடங்கள் ஆகிறது. இதனை முன்னிட்டு ரஜினி ரசிகரும், இயக்குனருமான தேசிங் பெரியசாமி டிவிட்டரில் வைரல் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

27 Years Of Baashha The Fan Boy Moment of Desingh Periyasamy

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி வேடத்தில் நடிக்க, சத்யா மூவீஸ் தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்க, தேவா இசையமைக்க, ஜனவரி 12ம் தேதி 1995ம் ஆண்டு வெளிவந்தது. அமிதாப் பச்சன் நடித்து இந்தியில் வெளியான 'ஹம்' படத்தின் ரீமேக்காக பாட்ஷா படம் உருவானது.  ரஜினியுடன் நக்மா, ரகுவரன், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் வெளியாகி 27 வருடங்கள் ஆனாலும் படம் இன்றும் பார்ப்பவர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். படத்தின் லாஜிக் மீறல்களை தாண்டியும் தமிழ் சினிமாவில் பாட்ஷா படத்திற்கு தனி இடம் உண்டு.

சமீபத்தில் வந்த அசுரன், வேதாளம், அஞ்சான், மதுர, தெறி போன்ற படங்களின் திரைக்கதை கட்டமைப்பும் பாட்ஷா படத்தின் ப்ளாஸ்பேக் உத்தியின் அடிப்படையில் அமைந்ததே. அந்த அளவிற்கு பாட்ஷா படம் தமிழ் சினிமா கமர்சியல் படங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. அண்ணாமலை, வீரா படங்களின் வெற்றிக்கு பிறகு முற்றிலும் மாறுபட்ட களத்தில் சுரேஷ் கிருஷ்ணா - ரஜினி கூட்டணி பாட்ஷா படத்தில் பயணித்திருக்கும்.

வடிவேலு-வின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் அடுத்த அப்டேட்! SANA-வின் வேற லெவல் சம்பவம் LOADING..!

 

27 Years Of Baashha The Fan Boy Moment of Desingh Periyasamy

இந்நிலையில் ரஜினி ரசிகரான இயக்குனர் தேசிங் பெரியசாமி டிவிட்டரில் பாட்ஷா படத்தின் நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில், "1995, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் பாஷா, நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது தினத்தந்தியில் இச்செய்தியை படித்தேன். வெள்ளிமலரில் தலைவர் ஆட்டோகாரர் உடையில் நடந்து வந்துகொண்டிருக்கும் கலர் ஃபோட்டோ போட்டிருந்தார்கள்.அந்த ஃபோட்டோவை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று தெரியாது.அதை பார்க்கும்போதெல்லாம் எனக்குள் ஒரு கதை ஓடியது. அந்த பாதிப்பில் நானாக கற்பனை செய்துகொண்டு ஒரு பாட்டு எழுதினேன்..நான்கு வரிகள்தான்.

" பாஷா வர்றாண்டா

பாஷா வர்றாண்டா

தப்பு பன்னா கண்டிப்பாண்டா

மீறி பன்னா தண்டிப்பாண்டா" எனக்கு தெரிந்து நான் எழுதிய முதல் படைப்பு. வகுப்பில் அருகில் இருக்கும் நண்பனிடம்(ஜகதீஷ் என்று நியாபகம்)காட்டினேன் எதுவும் சொல்லாமல் சிரித்தான்.அன்றிலிருந்து பாஷா பற்றிய செய்திகளை படிக்க படிக்க ஆர்வம் அதிகமானது. ஒரு நாள் ஸ்கூல் விட்டு வரும்பொழுது எங்கேயோ ஸ்பீக்கரில் ஒரு பாடல் ஒலித்தது.

"நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்" கேட்டவுடன் கண்டுபிடித்துவிட்டேன்.இது பாஷா பாடல் என்று ஒரிரு நாளில் திரும்பிய பக்கமெல்லாம் அதே பாடல் கேட்டுக்கொண்டிருந்தது. அனைவரும் அதையே பாடிக்கொண்டிருந்தார்கள். ஆண்டு விழா என்றாள் ஹிந்தி பாடல்களுக்கு மட்டுமே டான்ஸ் ஆடும் பழக்கம் எங்கள் ஸ்கூளில் உண்டு.ஆனால் அந்த ஆண்டு ஆட்டோக்காரன் பாட்டும் தேர்வு செய்யப்பட்டது. இதை விட என்ன சான்ஸ் வேண்டும்? அதுவரை எந்த மேடையிலும் ஆடி பழக்கமிலாத நான் ஓடிச்சென்று கலந்து கொண்டேன். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் தினமும் அந்த பாடலுக்கு நடன பயிற்சி. இடையில் ஒரு நாள் ஊரே பரபரப்பானது. ஆம் பாஷா ரிலீஸ். எல்லாரும் படம் பார்த்துவிட்டு பாஷா பாஷா என்று பேசிக்கொண்டிருந்தார்கள். வீட்டில் கூட்டிப்போகச்சொல்லி நச்சரித்தேன். ஒரு நாள் மாலை அழைத்துச்செல்வதாக கூறினார்கள். அன்று முழுக்க வகுப்பில், "பாஷா பாக்கப்போறன் பாஷா பாக்கப்போறன்" என்று சொல்லிக்கொண்டே இருந்தேன்.

மாநாடு 50 வது நாள்: பட வெற்றிக்கு இவங்க தான் காரணம்! நெகிழ்ச்சியான அறிக்கை விட்ட தயாரிப்பாளர்

 

வீட்டில் இருந்து கிளம்பி தியேட்டர் செல்லும் வரை ரோட்டில் ஒட்டியிருக்கும் போஸ்டர்களை பார்த்து படத்தை பற்றி கற்பனை செய்துகொண்டே சென்றேன். நல்ல கூட்டம் டிக்கெட் வாங்கி உள்ளே சென்று சீட்டில் உட்கார்ந்த பின்புதான் அப்பாடா படம் பார்த்துவிடுவோம் என்று நம்பினேன்.எக்ஸ்ட்ரா சேரெல்லாம் போட்டு படம் பார்த்தார்கள்.சிலர் கதவருகே நின்று கொண்டே பார்த்தார்கள்.படம் துவங்கியது. தியேட்டர் குலுங்கியது. சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டில் இருந்து படம் முடியும் வரை அதிர்ந்தது. அறிமுக காட்சி,மெடிக்கல் காலெஜ் காட்சி,போலீஸ் உயர் அதிகாரியை சந்திக்கும் காட்சி,இடைவேளை சண்டை காட்சி,பாஷா அறிமுக காட்சி,க்ளைமாக்ஸ் சண்டை காட்சி என்று அனைத்தும் மாஸ் மாஸ் மாஸ். இப்படி ஒரு ஹீரோ இப்படி ஒரு ஹீரோயிசம்.இப்படி ஒரு எனர்ஜி நான் பார்த்ததில்லை.

27 Years Of Baashha The Fan Boy Moment of Desingh Periyasamy

படம் முடிந்து வீடு திரும்பியும் என்னுள் அந்த தாக்கம் நீங்கவில்லை. பாஷா என்னுடனே வந்துவிட்டார். அடுத்த நாள் வகுப்பில் நான் கதை சொல்லி என் நரேஷனில் பாஷா பார்த்தார்கள் சில நண்பர்கள். பாஷா என்னைவிட்டு போகவேயில்லை. அதே எனர்ஜியோடு ஸ்கூல் annual dayவில் ஆடினேன். நானே பாஷாவாக. மிகப்பெரிய வெற்றி பெற்றது அந்த நிகழ்ச்சி. ஆடி முடித்து கீழே இறங்கியதும் யார் யாரோ வந்து கை கொடுத்தார்கள். நிறைய பேர வந்து கன்னத்தை கிள்ளினார்கள். ஒரு ஆட்டோக்காரர் என்னை தூக்கிக்கொண்டு நடந்தார். அன்றிலிருந்து பாஷாவாக அறியப்ப்ட்டேன்.vice principal அன்பழகன் என்னை அப்படித்தான் அழைப்பார். வாட்ச்மேன் கலியபெருமாள் "ஆட்டோக்காரரே” என்று அழைப்பார்.

27 Years Of Baashha The Fan Boy Moment of Desingh Periyasamy

அதுதான் என் சினிமாக்கனவுக்கான ஆரம்பம் என்று அப்பொழுது எனக்கு தெரியாது. அதற்கு பிறகு பல மேடை நிகழ்ச்சிகள்,பல படைப்புகள்.இருபது வருடங்கள் கடந்துவிட்டது.இதோ இன்று நானும் ஒரு இயக்குனர்! என்னை இந்த சினிமா உலகிற்கு கையை பிடித்து அழைத்து வந்த பாஷா திரும்ப வருகிறார். இன்று மீண்டும் அதே பாஷா ரிலீஸ் ஆகிறது. கிளம்பி விட்டோம் பாஷா பார்க்க. நான் இன்னும் ஆர்வத்தோடு, அதே ஐந்தாம் வகுப்பின் மனதோடு... இந்த பாஷா இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்களை அப்படியே வைத்திருப்பார். நாங்களும் அவரை கொண்டாடிக்கொண்டே இருப்போம். ஏனென்றால், "ஒரே ஒரு பாஷாதான் ஊருக்கெல்லாம்" என பழைய நினைவுகளை டிவிட்டரில் அசைபோட்டுள்ளார்

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

27 Years Of Baashha The Fan Boy Moment of Desingh Periyasamy

People looking for online information on 27 Years Of Baashha, பாட்ஷா படம், ரஜினி, Desingh Periyasami, Rajinikanth, Super Star will find this news story useful.