RRR Others USA
www.garudabazaar.com

RRR FDFS: படம் எப்படி இருக்கு? தெறிக்க விடும் public கமெண்ட்ஸ்.. வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பயங்கர எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியுள்ளது.

RRR movie FDFS public review video viral

பொய் வழக்கில் சரவணன் கைது… சந்தியா எடுத்த முடிவு – அடுத்த லெவலுக்கு செல்லும் ராஜா ராணி 2!

பிரம்மாண்டத்தை உருவாக்கிய கலைஞர்கள்….

ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கும் RRR படத்தை இயக்குனர் ராஜமௌலி பாகுபலி வெற்றிக்குப் பின் இயக்கியுள்ளார். இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கின்றனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகிறது. இந்த படத்துக்கு செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார். எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சாபுசிரில் கையாள்கிறார். கொரோனா காரணமாக தாமதமான RRR இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.

தமிழகத்தில் 550 திரையரங்குகளில்…

RRR movie FDFS public review video viral

RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீஸாகிறது.  இந்த படத்துக்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது. படத்தின் ரன்னிங் டைம்  3 மணி நேரம் 5 நிமிடங்கள். RRR படம்  மார்ச் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே திரு டிவிவி தானய்யா தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் திரு ராஜமௌலி இயக்கத்தில், திரு ராம் சரண் மற்றும் திரு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்' இன்று வெளியாகியுள்ளது.  தமிழ்நாட்டில் 550 அரங்குகளில் திரு சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முதல்நாள்  முதல்காட்சி

இந்நிலையில் பயங்கர எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று RRR திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தின் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்பட்டு முடிந்துவிட்டது. இந்நிலையில் படத்தை திரைய்ரங்குகளில் உற்சாகமாகக் கொண்டாடிய ரசிகர்களின் படத்தைப் பற்றிய கருத்துகள் இப்போது வெளிவர தொடங்கிவிட்டன.

RRR movie FDFS public review video viral

பிஹைண்ட்வுட்ஸ் public review

இதையடுத்து நமது சேனலின் public review வீடியோ வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தையும், இயக்குனர் ராஜமௌலி, பட கதாநாயகர்களான ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரைப் பாராட்டி தள்ளியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் பெஸ்ட் முத்தக் காட்சி இதுதான்… அசோக் செல்வன் open talk பேட்டி!

RRR FDFS: படம் எப்படி இருக்கு? தெறிக்க விடும் PUBLIC கமெண்ட்ஸ்.. வீடியோ! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

RRR movie FDFS public review video viral

People looking for online information on Alia Bhatt, NTR, Ram Charan, RRR, Shriya Saran, SS Rajamouli will find this news story useful.