www.garudabazaar.com

வேற யாராவதா இருந்தா... இந்நேரம் செவரு 'ஏறிக்குதிச்சி' ஓடியே போயிருப்பாங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் நேற்று மாட்டுனியா டாஸ்க் வழியாக அனிதாவுக்கும், ஆரிக்கும் இடையில் முட்டிக்கொண்டது. என் ஹஸ்பெண்ட், பேமிலி பத்தி பேசாதீங்க என சொன்ன அனிதா நான் டேலண்ட் தான் என கூறினார். இதைப்பார்த்த ஆரி பதிலுக்கு அவரு உன்னோட ஹஸ்பெண்ட் தான் யாரு இல்லன்னு சொன்னா. நீங்க டிஆர்பி டேலண்ட் என அனிதாவிடம் சொன்னார். கடைசியில் இதுகுறித்து மேலே பேச வேண்டாம் என மற்றவர்கள் கூற, இந்த பஞ்சாயத்து முடிந்தது.

Netizens Extend their Support for Aari Arjunan in Twitter

இதுகுறித்து அனிதா, ரம்யாவிடம் பேச ஆரியும் தன்னுடைய கருத்தை சோம், ரியோ இருவரிடமும் எடுத்து கூறினார். இதற்கிடையில் ரம்யா அவரு அடுத்து கேமரா கிட்ட போய் பேசுவாரு என சொல்ல, அதேபோல ஆரி கேமரா முன்னாடி சென்று தான் அனிதா குடும்பம் குறித்து ஏதேனும் தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக தற்போது ட்விட்டரில் ஆரி இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் வீட்டுல எல்லாருமே எப்போ பார்த்தாலும்  ஆரியத்தான் கார்னர் பண்றாங்க. எல்லாரும் சேர்ந்து அவருக்கு எதிரா பேசுறாங்க. ஆனா அவரு ரொம்ப தைரியமா இருக்காரு. நல்லாவே வெளையாடுறாரு. வேற யாராவது அவரோட இடத்துல இருந்திருந்தா இந்நேரம் பிக்பாஸ் வீட்டோட செவரு ஏறிக்குதிச்சி  ஓடியே போயிருப்பாங்க என கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருக்கு ஆதரவாக #AariArmy என ஹேஷ்டாக் போட்டு தங்களின் சப்போர்ட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Netizens Extend their Support for Aari Arjunan in Twitter

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.