Udanprape others
www.garudabazaar.com

தளபதி விஜய்ய பத்தி சொல்லனும்னா... பீஸ்ட் ஹீரோயின் பூஜா ஹெக்டே சொன்ன பதில் என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

Nelson Beast Heroine Pooja Hegde said about Vijay

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Nelson Beast Heroine Pooja Hegde said about Vijay

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லியில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பீஸ்ட் பட ஹீரோயின் பூஜா ஹெக்டே தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஒரு செசனில் பதில் அளித்தார். அப்போது அவரிடம் நடிகர் விஜய் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்று ஒரு விஜய் ரசிகர் கேள்வி கேட்டிருந்தார்.

Nelson Beast Heroine Pooja Hegde said about Vijay

அந்த கேள்விக்கு பதிலளித்த பூஜாஹெக்டே, ஒரு வார்த்தையில் பதில் சொல்றது சிரமம். இருந்தாலும் முயற்சி செய்றேன். விஜய் மிகவும் இனிமையானவர் என டிவீட் செய்து பதில் அளித்தார். பூஜா ஹெக்டே தற்போது ராதே ஷ்யாம் படத்தின் வெளியீட்டுக்கு காத்திருக்கிறார். இந்த படம் 2022 ஜனவரி 14 அன்று வெளியாக உள்ளது. அதனைத்தொடர்ந்து ஆச்சார்யா, மகேஷ் பாபுவின் அடுத்த படம் என பிஸியாக உள்ளார்.

Nelson Beast Heroine Pooja Hegde said about Vijay

பூஜா ஹெக்டே நடித்த MEB திரைப்படம் தெலுங்கில் 15.10.2021 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Nelson Beast Heroine Pooja Hegde said about Vijay

People looking for online information on Beast, Pooja Hegde, Vijay will find this news story useful.