மாஸ்டர், சூரரைப் போற்று ரேஸில் நயன்தாரா - மூக்குத்தி அம்மன் தரிசனம் கொடுப்பது எப்போது..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி முக்கியமான தகவலை தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ரிலீஸ் | nayanthara's mookuthiamman to relase on may month says rj balaji

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன். எல்.கே.ஜி படத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜி இத்திரைப்படத்தை என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியுள்ளார். ஐசரி கனேஷ் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் ரிலீஸ் ஆகி வைரல் ஹிட் அடித்தது. அம்மன் வேடத்தில் நயன்தாரா இருக்கும் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் ட்விட்டரில் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி படத்தை பற்றி முக்கியமான தகவலை தெரிவித்துள்ளார். ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், இது நூறு சதவீதம் சாமி படம் என தெரிவித்துள்ளார். மேலும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் மே மாதம் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாஸ்டர், சூரரைப் போற்று, கோப்ரா உள்ளிட்ட படங்கள் சம்மருக்கு வருவதாக கூறப்படும் நிலையில் நயன்தாராவும் அந்த ரேஸில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Entertainment sub editor