www.garudabazaar.com

"வெறித்தனமான Fan-ஆ இருப்பாரோ!".. BOUNCERS-ஐ விலக்கி, நயன்தாராவுடன் செல்ஃபி எடுக்க கேட்ட முதியவர்! video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நயன்தாரா அண்மையில் விக்னேஷ்  சிவனுடன் இணைந்து திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு வந்தார்.

Nayanthara Vignesh Shivan tirupati old man request selfie video

இந்த தரிசனத்தின் போது நயன்தாரா-விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து கோயில் வளாகத்தில் நடந்து வந்த காட்சிகள் வைரலாகி வந்தன. மேலும் இந்த தரிசனம் முடிந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நடந்து வரும் பொழுது அவர்களை தொடர்ந்து 60 வயது மதிக்கத்தக்க ரசிகர் ஒருவர் ஓடிவந்துள்ளார்.

அவரிடம் அங்கிருந்தவர்கள் என்னவென்று வினவியபோது, அவர் நயன்தாராவுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்ற தனது ஆசையை கூறியுள்ளார். இதனை அடுத்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒப்புக் கொண்டதன் பேரில், அந்த முதியவர் நயன்தாராவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இந்த வீடியோ தான் இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சமந்தா இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

அண்மையில் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் திரைப்படம் டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ஷாருக் கான் நடிப்பில் அட்லீ இயக்கும் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கிறார். 

இதேபோல், நேரம் மற்றும் பிரேமம் ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் அடுத்ததாக பிரித்விராஜ் நடிப்பில் இயக்கும் கோல்டு என்கிற திரைப்படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்.

Also Read: “இதெல்லாம் எங்க Start ஆச்சுனு தெரில”..  Rumours குறித்து முதல் முறை மனம் திறந்த சமந்தா.. பரபரப்பு Video!

"வெறித்தனமான FAN-ஆ இருப்பாரோ!".. BOUNCERS-ஐ விலக்கி, நயன்தாராவுடன் செல்ஃபி எடுக்க கேட்ட முதியவர்! VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Vignesh Shivan tirupati old man request selfie video

People looking for online information on Nayanthara, Nayanthara Vignesh Shivan tirupati, Vignesh shivan will find this news story useful.