www.garudabazaar.com

விக்னேஷ் சிவனுடன் தனது அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா! வைரலாகும் புகைப்படங்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கினார்.

ACTRESS NAYANTHARA CELEBRATES MOM’S BIRTHDAY WITH HER

அதன்  பின் சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி படங்கள் மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். அதன் பின்னர் ரீ என்ட்ரி ஆகி ராஜாராணி, ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றதால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டார்.  இவர் கடைசியாக தமிழில் நெற்றிக்கண் படத்தில் காணப்பட்டார்.

  • ACTRESS NAYANTHARA CELEBRATES MOM’S BIRTHDAY WITH HER

தற்போது விஸ்வாசம் இயக்குனர் சிவாவின் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார். இது போக சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர், ஷாருக்கான் மற்றும் அட்லியின் படம், அல்போன்ஸ் புத்ரனின் கோல்ட் படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் கோல்ட் படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்தார் என செய்திகள் வெளியானது.

ACTRESS NAYANTHARA CELEBRATES MOM’S BIRTHDAY WITH HER

இப்போது, ​​நயன்தாரா தனது அம்மாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "அன்புள்ள ஓமனா குரியன் அம்மு உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். " என குறிப்பிட்டுள்ளார்.

ACTRESS NAYANTHARA CELEBRATES MOM’S BIRTHDAY WITH HER

People looking for online information on Nayanthara, Vignesh shivan will find this news story useful.