www.garudabazaar.com

TRENDING: தலைவரே! தலைவரே! தலைவரே! இன்னைக்கு சமைக்காதீங்க! தயாரிப்பாளருக்கு மெசேஜ் அனுப்பிய ZOMATO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Time Loop பாணியில் அமைந்துள்ள மாநாடு படம் வியாழன் அன்று (25.11.2021) உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ளது.

zomato use maanaadu sjsuriyah viral dialogue for ad

இந்த Maanaadu 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு (Venkat Prabhu) இயக்கியுள்ளார். இந்த படத்தை V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். வியாழக்கிழமை வெளியான இந்த படம் முதல் 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 22 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்துள்ளார். மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது.

zomato use maanaadu sjsuriyah viral dialogue for ad

இந்த படத்தில் SJ சூர்யா பேசியுள்ள தலைவரே தலைவரே தலைவரே எனும் வசனம் படம் வெளியானதில் இருந்து மீமாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தற்போது இந்த வசனத்தை வைத்து ZOMOTO நிறுவனம் ஒரு பாப் அப் மெசேஜ்ஜை தயாரிப்பாளர் ராக்போர்ட் ஸ்ரீராமுக்கு அனுப்பியுள்ளது. அதில் "தலைவரே தலைவரே தலைவரே இன்னைக்கு சமைக்காதீங்க! நாங்க இருக்கோம்" என குறிப்பிட்டுள்ளனர். இதனை தயாரிப்பாளர் ராக்போர்ட் ஸ்ரீராம் டிவிட்டரில் பகிர்ந்து, மாநாடு படக்குழுவை டேக் செய்துள்ளார்.

zomato use maanaadu sjsuriyah viral dialogue for ad

ராக்போர்ட் நிறுவனம், வலிமை படத்தின் வட தென் ஆற்காடு ஏரியாவின் தியேட்டர் உரிமையை மிகப்பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன் ஆகியோர் படத்தை பாராட்டியிருந்தனர். ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றுள்ளது.

zomato use maanaadu sjsuriyah viral dialogue for ad

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

zomato use maanaadu sjsuriyah viral dialogue for ad

People looking for online information on Maanaadu, Silambarasan TR, Sj suriyah, Zomoto will find this news story useful.