www.garudabazaar.com

"சாதி அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்க" - "கள்ளன்" இயக்குனர் CM ஸ்டாலினுக்கு வேண்டுகோள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கள்ளன்' திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் முதல்வருக்குவேண்டுகோள்.

kallan movie director requesting to CM MK Stalin

எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் இன்று (18.03.2022) வெளியாகியிருக்கும் கள்ளன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட விடாமல் சில சாதி அமைப்புகள் திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டி வருகின்றன.

kallan movie director requesting to CM MK Stalin

'கள்ளன்' என்ற சொல்லை டைட்டிலாக வைக்கக் கூடாது என நீதிமன்றத்தில் இந்த சாதி அமைப்புகள் வழக்கு தொடர்ந்து அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் சாதி அமைப்புகள் கள்ளன் திரைப்படத்தை திரையிடவிடாமல் தடுத்து வரும் செயலைக் கண்டித்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

kallan movie director requesting to CM MK Stalin

இது குறித்து பேசிய இயக்குனர் சந்திரா தங்கராஜ், "நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும் பெரியார் மண்ணில் சாதி அமைப்புகளின் ஆதிக்கம் தலை தூக்க விடாமல் முதலமைச்சர் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். மேலும் கள்ளன் என்ற தமிழ் சொல் திருடர்களை தான் குறிக்கிறது. ஏற்கனவே திருடன், கள்வர் போன்ற பெயர்களில் படங்கள் உள்ளதால் கள்ளன் என்ற சொல்லை டைட்டிலாக வைத்ததாக அவர் தெளிவுப்படுத்தினார்.

ஜாதி அமைப்பைச் சேர்ந்த ஒரு தலைவர் என்னுடைய அலைபேசி எண்ணை பொதுவெளியில் அனுப்பியிருக்கிறார்.அவர்கள் பின்னிரவு நேரங்களில் போன் போட்டு ஆபாசமாகப் பேசுகிறார்கள்.இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருத்தர் ஆபாச படங்களை அனுப்பி இது போல் எனக்கும் பண்ண முடியுமா என்று கேட்கிறான்.கடந்த ஒரு மாதமாகவே இது போல் ஆபாச தாக்குதல் நடத்துகிறார்கள்.இதுதான் பெண்களுக்கு இவர்கள் கொடுக்கிற மரியாதை" என்று கண் கலங்கினார்.

kallan movie director requesting to CM MK Stalin

தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று முதல்வருக்கு வேண்டுகோள் வைத்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

kallan movie director requesting to CM MK Stalin

People looking for online information on Kallan, Karu Palaniappan, MK Stalin will find this news story useful.