Veetla Vishesham Others Page USA

நடிகை நந்திதா ஜெனிபரின் அப்பா.. நடன இயக்குனர் சின்னா மரணம்.. சோகத்தில் திரையுலகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடன இயக்குனர் சின்னா மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 69.

Nanditha Jennifer Father Dance Master Chinna Passed away

Also Read | VIRAL: கடற்கரையில் HOT போட்டோ ஷூட்.. திவ்யபாரதி வெளியிட்ட சீரிஸ் புகைப்படங்கள்!

ஆந்திர மாநிலம் ஜங்கா ரெட்டி கூடத்தை சார்ந்த இவர். பாக்கியராஜ்  இயக்கிய தூரல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணிக்கனவுகள் ஆகிய படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்ரியவர் சின்னா. 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனக் குழுவில் உதவியாளராக இருந்துள்ளார்.

சேஷூ மாஸ்டர், பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி, சலீம், வேம்பட்டி சத்தியம் போன்ற நடன இயக்குனர்களிடம் உதவி நடன இயக்குனராக இருந்தவர். பாக்கியராஜ் இயக்கிய ‘’தூரல் நின்னு போச்சு’’ படத்தில் இவரை அறிமுகம் செய்து வைத்தார்.

Nanditha Jennifer Father Dance Master Chinna Passed away

இது போக ‘வாங்க மச்சான் வாங்க’, ‘உன்னை விட மாட்டேன்’, ஆர்.சுந்தரராஜனின் இயக்கத்தில் ‘என்னைத் தெரிஞ்சா சொல்லாதீங்க’, நடிகர் அஜித்தின் அறிமுக படமான அமராவதி, வைதேகி காத்திருந்தாள்,  வானத்தை போல, செந்தூர பாண்டி, நேசம் உட்பட 200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர்.

புவனேஸ்வரி, நாகலெட்சுமி, லட்சுமி ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி,அம்மன் சீரியல்களில் நடித்த பிரபல நடிகை ஜெனிபரின் அப்பா தான் நடன இயக்குனர் சின்னா.

Also Read | பிரபல போட்டோகிராபருடன் இணைந்து VELVET கிளவுஸில் போட்டோ ஷூட்.. பட்டைய கிளப்பிய மாளவிகா மோகனன்!

தொடர்புடைய இணைப்புகள்

Nanditha Jennifer Father Dance Master Chinna Passed away

People looking for online information on Dance Master, Dance Master Chinna, Dance Master Chinna Passed away, Nanditha Jennifer Father will find this news story useful.