"கோவை கலவரத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பற்றி மாநாடு படம் பேசுகிறது!"- சீமான்!
முகப்பு > சினிமா செய்திகள்Time Loop பாணியில் அமைந்துள்ள மாநாடு படம் வியாழன் அன்று (25.11.2021) உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி உள்ளது.
சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபல விமர்சகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன் ஆகியோர் படத்தை பாராட்டியிருந்தனர். தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மாறுபட்ட திரைக் கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாதக் காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச்செய்து, மிகவும் ரசிக்கும்படியாகத் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறது. மதத்தால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி சமகாலத்தில் ஆளும் வர்க்கத்தால் நாளும் அரங்கேற்றப்படும்போது, அதனை வெகுமக்களுக்கு உணர்த்தி விழிப்பூட்டும் சுவைமிக்கக் கலைப்படைப்பாக இத்திரைப்படத்தைத் தந்திருக்கிறார் தம்பி வெங்கட்பிரபு.
இசுலாமிய மக்கள் குறித்துப் பரப்பப்படும் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி, கோவை கலவரத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போகிறபோக்கில் பேசி, அவர்கள் குறித்துப் பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தவறானப் பிம்பத்தை தகர்த்தெறியும் விதத்திலான வசனங்களையும், காட்சிகளையும் படத்தின் கருப்பொருளாக அமையச் செய்திருப்பது இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும். சொல்ல வந்த செய்தியை மிகச்சரியாகக் காட்சிப்படுத்தி, அதனைத் திரைமொழியில் மக்களுக்கு விருந்தாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள தம்பி வெங்கட்பிரபுவின் கலைத்திறன் இத்திரைப்படத்தின் மூலம் மென்மேலும் மெருகேறியிருக்கிறது.
எனது தம்பி சிலம்பரசன் அவர்கள் தனது துடிப்பான நடிப்பாற்றலாலும், மக்களின் மனம்கவரும் வகையிலான தனித்துவமிக்க திரைமொழி ஆளுகையினாலும், நுட்பமான உடல்மொழியாலும், உயிரோட்டமான வசன உச்சரிப்புகளாலும் மீண்டுமொரு முறை முத்திரைப் பதித்திருக்கிறார். கலையுலகப் பயணத்தில் அவரது வளர்ச்சி குறித்து பெரும் அக்கறை கொள்கிறேன்! அவரது உயரத்தை எண்ணி மனமகிழ்வடைகிறேன்! அன்புச்சகோதரன் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் எதிர்மறைக் கதாபாத்திரத்தைத் தாங்கியிருந்தாலும் தனக்கே உரித்தான மொழிநடையாலும், எவரையும் சுண்டியிழுக்கும் வகையிலான அளப்பெரும் நடிப்புத்திறனாலும் படத்தினையே தாங்கி நிற்கிறார்.
அவர் திரையில் தோன்றும் காட்சிகள் யாவற்றையும் பெரிதும் விரும்பி ரசித்தேன்! தம்பி யுவன் சங்கர்ராஜாவின் பலமிக்கப் பின்னணி இசையும், தம்பி கே.எல். பிரவினீன் நேர்த்தியானப் படத்தொகுப்பும் படைப்புக்குப் பெரிதும் துணைநிற்கின்றன. இத்திரைப்படத்தில் நடித்த அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், ஐயா ஒ.ஜி.மகேந்திரன், தம்பி மனோஜ் பாரதிராஜா, தம்பி சுப்பு அருணாச்சலம், தம்பி பிரேம்ஜி அமரன், தம்பி கருணாகரன். தங்கை கல்யாணி பிரியதர்ஷினி என யாவரும் தங்களது பங்களிப்பினைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
காலத்திற்கேற்ற அரசியலைப் பேசும் சாலச்சிறந்தப் படைப்பாகவும், மாறுபட்ட திரைக்கதை அமைப்பு கொண்ட நல்லதொரு திரைப்படமாகவும் வெளிவந்திருக்கும் இதனைத் தயாரித்து, பெரும் சிரமங்களையும், இடையூறுகளையும் எதிர்கொண்டபோதும் சற்றும் தளராது நின்று வென்றுகாட்டி, வெற்றிப்படைப்பாக நிலைநாட்டிய ஆருயிர் இளவல் எனது பாசத்திற்குரிய தம்பி சுரேஷ் காமாட்சி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! மண்ணுக்கும், மக்களுக்கும் தேவையான இன்னும் பல பல படைப்புகளைத் தந்து, அவர் மென்மேலும் வளர்ந்து உச்சம் தொட வேண்டுமென எனது வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவிக்கிறேன் எனது தம்பிகள் தங்களது அயராத உழைப்பின் மூலம் ஈட்டிய அளப்பெரும் வெற்றியைக் கண்டு உள்ளம்பூரிப்பு அடைகிறேன்! நானே வெற்றி பெற்றதாக எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்! இப்படைப்புக்காக உழைத்திட்ட அத்தனைப் பேருக்கும் எனது வெற்றி வாழ்த்துகளையும், உளப்பூர்வமான பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்! என குறிப்பிட்டுள்ளார்.
இந்த Maanaadu 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு (Venkat Prabhu) இயக்கியுள்ளார். இந்த படத்தை V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் வாகை சந்திரசேகர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Maanaadu Movie 3 Days Tamil Nadu Box Office Collection
- Maanaadu SJ Suriya Dialogue Becomes Rain Meme Viral Trending
- SK Doctor Movie Started This, Says Simbu Maanaadu Director
- Rajini Appreciated Maanaadu In Call Venkat Prabhu Opens Up Video
- Did Thala Ajith Seen Simbus Maanaadu Venkat Prabhu Byte Video
- Silambarasan TR About Maanaadu Movie Blockbuster Success
- Venkat Prabhu Shares Tweet About Maanaadu Profit
- Is Silambrarasan Maanaadu2 Coming Praveen KL Viral Tweet
- Superstar Rajinikanth Appreciates Maanaadu Movie SJ Suriyah
- Silambarasan Tr Maanaadu Movie Box Office Collection
- Sivakarthikeyan Appreciates Maanaadu Movie Cast & Crew
- Superstar Rajinikanth Appreciates Maanaadu Movie Cast & Crew
தொடர்புடைய இணைப்புகள்
- சிந்துன கண்ணீருக்கு சொந்தம் வராமலா போயிரும் 🙏, Simbu Emotional Letter To Fans 😢..
- Siva Karthikeyan, படம் Release பிரச்சனை அப்போ வந்து பேசுனாரு 🙏, Simbu Emotional Moments 😢
- படம் ஓடலனாலும் பரவாயில்ல... STR Emotional About Fans | Maanaadu
- 🔴LIVE: Jolly... நாங்க Party பண்ண போறோம் 🤣 Maanaadu Celebrity Show | Simbu, SJ Suryah, Yuvan, VP
- தலைவன் SIMBU-வை இப்படி சிரிச்சு பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு❤️😍Maanaadu
- Maanaadu Celebrity Show - Photos
- DHANUSH-Kodi பேரு OK-வா? 😉🤣 SIMBU Reveals SECRET | Maanaadu Celebrity Show | SJ Suryah, STR
- Maanaadu Chinese-ல எடுக்க போறோம் 🤣🤩 Ultimate Review By Celebrities | Simbu, SJ Suryah, Venkat Prabhu
- நீ Maanaadu பாத்தியா 🤣 Anchor-ஐ கலாய்த்த Venkat Prabhu 😂 Simbu, SJ Suryah | Celebrity Show
- தலைவரே... 😍 "Simbu என் Friend-யா" - SJ Suryah | Maanaadu Exclusive Celebrity Show
- அந்தக் கண்ண பார்த்தாக்க 😍 Simbu Cute Candid Moments 💕 Maanaadu Celebrity Show
- 'தலைவரே'... படத்துல விட நேர்ல Jolly-ஆ இருக்காருயா😂😍 SJ Suryah Candid | Maanaadu Celebrity Show