முத்து பட நடிகை விசித்ரா.. இப்ப எப்படி இருகாங்க பாருங்க.. வைரல் ஆகும் இன்ஸ்டாகிராம் ஃபோட்டோ!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு என முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தவர் நடிகை விசித்ரா.

தொடக்க காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், பின்னர் சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் இவர் சில முக்கிய தமிழ் படங்களில் தோன்றியதுடன் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார்.
திடீர் திருப்புமுனையாக செல்வாவின் தலைவாசல் திரைப்படம் இவருக்கு முக்கியப் படமாக அமைந்தது. இதனை அடுத்து ரஜினிகாந்த் நடித்த முத்து, சுயம்வரம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய துணை வேடங்களில் நடித்தார்.
பின்னர் தொலைக்காட்சி வாழ்க்கையில் நுழைந்த இவர், சில தொடர்களில் நடித்த பின்னர் திருமணம் செய்து கொண்டு புனேவில் குடியேறினார். அதன்பின்னர் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றார். இறுதியாக 2002ஆம் ஆண்டு வெளியான இறுதி பாடகன் என்கிற படத்தில் நடித்து இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராசாத்தி சீரியலில் நடித்த இவர், தற்போது இன்ஸ்டாகிராமில் தமது சமீபத்திய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதை பார்க்கும் பலரும் நடிகை விசித்ரா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போனதாக குறிப்பிட்டுள்ளனர்.
ALSO READ: என்ன நண்பா?.. FirstLook-ஆ?.. விஜயின் தளபதி65.. வெளியான மரண மாஸ் அறிவிப்பு!