அழகு அம்மனாக நயன்தாரா... பக்தி பழமாக ஆர்.ஜே.பாலாஜி... வெளியான புதிய புகைப்படங்கள்..செம வைரல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக உயர்ந்து நிற்பவர் நடிகை நயன்தாரா. பத்து வருடங்கள் தமிழில் முன்னணி நடிகையாக இருப்பது அத்தனை சாதாரணமான காரியம் இல்லை. தனது சின்சியாரிட்டி மற்றும் சினிமாவின் மேல் கொண்ட பிரியத்தாலும் அவர் இந்த இடத்தை அடைந்து இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் அவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து 'மூக்குத்தி அம்மன்' என்ற படத்தில் நடிக்கிறார் என்று செய்தி வெளியானபோதே ரசிகர்கள் அனைவரும் செம குஷியாகி விட்டனர். படத்தின் ஸ்டில்கள் வைரலானது.

வெளியான முக்குத்தி அம்மன் புதிய போட்டோஸ் வைரல் Mookuthi Amman New stills Goes Viral ft Nayanthara RJ.Balaji

இந்நிலையில் எல்கேஜி படத்தில் கதாசிரியராக இருந்த பாலாஜி இந்த படத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி ரசிகர்களிடையே  ஆவலை ஏற்படுத்தி உள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக' மூக்குத்தி அம்மன்' படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயிருக்கிறது. இந்நிலையில் தற்போது படத்தை பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் அதாவது இறுதி கட்ட வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருப்பதாகவும், எல்லாம் முடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகு படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் பட ஷுட்டிங்கின் போது எடுத்த சில புகைபடங்கள் தற்போது சமூக வலைதளங்களை கலக்கிக் கொண்டிருக்கிறது. அந்த புகைப்படங்கள் இதோ..!

வெளியான முக்குத்தி அம்மன் புதிய போட்டோஸ் வைரல் Mookuthi Amman New stills Goes Viral ft Nayanthara RJ.Balaji

People looking for online information on Mookuthi Amman, Nayanthara, R.J.Balaji will find this news story useful.