மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து திரிஷா நடிக்கும் படம் ராம்.

திரிஷ்யம், பாபநாசம், தம்பி ஆகிய படங்களை இயக்கியவர் ஜீத்து ஜோசப். தனது விறுவிறுப்பான திரைக்கதை மூலம், இந்தியாவின் முக்கியமான இயக்குநராக ஜீத்து ஜோசப் இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஜீத்து ஜோசப்பின் அடுத்த படத்துக்கு ராம் என பெயரிடப்பட்டுள்ளது. மோகன்லால் கதாநாயகனாக நடிக்க, திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் மோகன்லால், திரிஷா, ஜீத்து ஜோசப் மூவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து திரிஷா தன் பதிவில், 'இந்தியாவின் தலைசிறந்த இயக்குநருடனும், மிகப்பெரிய சூப்பர்ஸ்டாருடனும் இணைந்து வேலை செய்வது மகிழ்ச்சியாகவுள்ளது என கூறியுள்ளார்.
கடந்த வருடம் தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் பேட்டயில் ஜோடி போட்ட திரிஷா, இந்தாண்டு மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Just chillin amidst one of India’s finest filmakers and the legendary superstar himself 😎⭐️
Blessed to be working with the best!#ram #jeethusir #mohanlalsir pic.twitter.com/tJaTB29ZCN
— Trish (@trishtrashers) January 30, 2020