'என்னது சம்சாவா..?!' - மனைவியிடம் மலையாளம் கற்கும் மிர்ச்சி செந்தில்.. செம ஜாலி வீடியோ.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் மிர்ச்சி செந்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மனைவியுடன் ஒரு க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜே.வாக கலக்கியவர் மிர்ச்சி செந்தில். இவர் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் தமிழகமெங்கும் பிரபலமானார். இத்தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்த ஶ்ரீஜாவை இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் இந்த ஜோடி, Kalyanam Conditions Apply என்கிற வெப் தொடரிலும் நடித்து அசத்தினர்.
இந்நிலையில் நடிகர் மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். புத்தாண்டு வாழ்த்தை அவர் தமிழில் சொல்ல, அவர் மனைவி மலையாளத்தில் சொல்கிறார். பிறகு தன் மனைவியிடம் இருந்து, மலையாளத்தில் வாழ்த்து சொல்ல, மிர்ச்சி செந்தில் செம ஜாலி செட்டை செய்கிறார். கணவன் - மனைவியின் இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.