Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவின் உடலை புதுமையான வழியில் பிரதே பரிசோதனை செய்த மருத்துவர்கள்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவின் உடல் புதுமையான வழிமுறையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

unique method was used for Raju Srivastav postmortem

Also Read | Bonda Mani : "உதவி செய்யுங்க..!..".. ICU-வில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி - கதறி அழுத சக நடிகர்.!

ராஜூ ஸ்ரீவஸ்தவா

1963-ம் ஆண்டு பிறந்த ராஜூ ஸ்ரீவஸ்தவா சிறுவயது முதலே நகைச்சுவை நடிகராகவேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தவர். 1980-ஆம் ஆண்டில் இருந்து நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட இவர், 2005-ம் ஆண்டு நடந்த, "தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச்" நிகழ்ச்சியின் முதல் சீசனின் மூலமாக பிரபல ஸ்டான்ட்-அப் காமெடியனாக உருவெடுத்தார். "மைனே பியார் கியா", "பாசிகர்", "பாம்பே டூ கோவா", "ஆம்தானி அட்டானி கர்ச்சா ரூபையா" போன்ற இந்தி படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ராஜு, உத்திர பிரதேச மாநிலத்தின் திரைப்பட வளர்ச்சி குழுவின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

unique method was used for Raju Srivastav postmortem

சோகம்

இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 10 ஆம் தேதி உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போது , ராஜு ஸ்ரீவஸ்தவா மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 40 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 58. ராஜு ஸ்ரீவஸ்தவாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

unique method was used for Raju Srivastav postmortem

பிரேத பரிசோதனை

நேற்று மரணமடைந்த ஸ்ரீவஸ்தவாவின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள மெய்நிகர் உடற்கூறாய்வு ஆய்வகத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேசிய எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் பிரிவின் தலைமை மருத்துவர் சுதிர் குப்தா," பொதுவாக பிரேத பரிசோதனையில் உயிரிழந்த நபரின் உடல் பிரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதன்பின்னர் உடல் தைக்கப்பட்டு உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்படும். ஆனால், மெய்நிகர் உடற்கூறாவில் டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் மூலமாகவே உடல் உறுப்புகளை நாம் தெளிவாக காண முடியும். இதற்கான நேரமும் குறைவு. இந்த முடிவுகள் ஆவணப்படுத்தப்படவும் எளிதானது. தென்கிழக்கு ஆசியாவில் இந்த வசதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டுமே இருக்கிறது" என்றார்.

Also Read | Raju Srivastava : சோகத்தில் ஆழ்த்திய பாலிவுட் நகைச்சுவை நடிகரின் மரணம்..! இதுதான் காரணமா..?

தொடர்புடைய செய்திகள்

unique method was used for Raju Srivastav postmortem

People looking for online information on Comedian Raju Srivastav, Raju Srivastav, RIP Raju Srivastav will find this news story useful.