www.garudabazaar.com

90களில் பிரபலமான நகைச்சுவை கலைஞர் கோவை குணா திடீர் மரணம்.. அதிர்ச்சி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நகைச்சுவை நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கோவை குணா இன்று மரணமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

Mimicry Artist Kovai Guna Passed away due to Health Illness

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடுபோன நகை.. போலீஸ் விசாரணையில் தெரியவந்த திடுக் உண்மை.!

தமிழக மக்களிடையே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி புகழடைந்தவர் கோவை குணா. ‘அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இதனை தொடர்ந்து குணா ‘சென்னை காதல்’ எனும் படத்திலும் நடித்திருந்தார். ஸ்டான்ட் அப் காமெடியாக இருந்தாலும் சரி, மிமிக்ரியாக இருந்தாலும் சரி குணா சில வினாடிகளில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுபவர்.

Mimicry Artist Kovai Guna Passed away due to Health Illness

Images are subject to © copyright to their respective owners.

கவுண்டமணி, ராதாரவி, சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களின் குரலில் பேசி பல்லாயிரக்கணக்கான மக்களை ரசிகர்களாக பெற்றவர். இந்நிலையில் உடல்நிலை நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் குணா அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்திருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான மக்களை சிரிக்க வைத்த கோவை குணா மரணமடைந்திருப்பது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | “இந்த ஆஸ்கர் ரொம்ப பெரிய விஷயம்” - The Elephant Whisperers ஆவணப்பட இயக்குநர் தமிழ்நாட்டில் பேட்டி!

Mimicry Artist Kovai Guna Passed away due to Health Illness

People looking for online information on Mimicry Artist, Mimicry Artist Kovai Guna, Mimicry Artist Kovai Guna Passed away will find this news story useful.