'கில்டு' பெயரில் பணமோசடியா? .. பரபரப்பு "கோர்ட்" உத்தரவு.. நன்றி சொன்ன ஜாகுவார் தங்கம்.. Exclusive!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) பெயரில் G.பாலசுப்ரமணியம் என்பவர் போலியான சங்கம் ஒன்றை தொடங்கி, அதன் பெயரில் வங்கி கணக்கு ஒன்றையும் தொடங்கி, கில்டு சங்கத்தின் லோகோ போலவே போலியான லோகோவையும் பயன்படுத்தி, நிஜ சங்கத்தின் உறுப்பினர்களிடம் பணம் வசூலித்து பணம் மோசடி செய்து, உறுப்பினர்கள் அனைவரையும் ஏமாற்றும் வகையில் செயல்பட்டு வந்ததாக உண்மையான கில்டு சங்கத்தின் தலைவர் கலைமாமணி. Dr.ஜாகுவார் தங்கம்.S.P தெரிவித்துள்ளார்.

MHC over Guild Jagurar thangams complaint over fake association

இதுகுறித்து நமக்கு பிரத்தியேகமாக தகவல்களை பகிர்ந்த கில்டு சங்கத் தலைவர் ஜாகுவார் தங்கம் அவர்கள், “இந்த மோசடியை எதிர்த்து உண்மையான கில்டு சங்கத்தின் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு (பதிவு எண்:C.S.NO.448 OF 2019 & O.A.Nos.713 & 714 OF 2019) மாண்புமிகு நீதியரசர் அவர்களால் விசாரிக்கப்பட்டு, “நமது சங்கம்தான் உண்மையான சங்கம்” எனவும், வேறு எந்த நபரும் நமது சங்கத்தின் பெயரையும், சங்கத்தின் லோகோவையும் பயன்படுத்த கூடாது எனவும் தீர்ப்பு அளித்துள்ளார் என்பதை உறுப்பினர்களுக்கு தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

MHC over Guild Jagurar thangams complaint over fake association

                                           (போலி கில்டு அமைப்பின் அறிக்கை)

மேலும் ஒரு சில நபர்கள் கில்டு சங்க பொறுப்பில் இருக்கிறோம் என்றும், distributor-ஆக இருக்கிறோம் என்றும், கில்டு பெயரை சொல்லி whatsapp குழுக்களை தொடங்கி, அதில் நமது கில்டு சங்கத்திற்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் பல பொய்யான தகவல்களை பரப்பி, உறுப்பினர்களை ஏமாற்றி, ‘திரைப்படத்தினை விற்றுதருகிறேன்’ என்று கூறி, தான் மட்டுமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடு, பல உறுப்பினர்களிடம் பணமோசடி செய்து ஏமாற்றி வருகிறார்கள். எனவே அந்த குழுவில் நீங்கள் யாராவது இருந்தால் நமது சங்க நலனை கருத்தில் கொண்டு தயவுசெய்து அந்த குழுவில் இருந்து உடனடியாக வெளியே வந்துவிடுமாறு உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.

MHC over Guild Jagurar thangams complaint over fake association

                                            (போலி கில்டு அமைப்பின் வங்கிக் கணக்கு)

நமது சங்கம் கில்டு whatsapp குழு ( GUILD MEMBERS ONLY 1 & GUILD MEMBERS ONLY 2 ) என்கிற பெயரில் இருக்கும், அந்த குழுவின் நிர்வாகிகளாக, சங்கத் தலைவர் திரு.ஜாகுவார் தங்கம், திரு.J.S.மணிமாறன், திரு.நாகலிங்கம், திரு.ரஞ்சித்குமார், மற்றும் திருமதி.பிரியா ஆகியோர் இருக்கிறார்கள். எனவே இந்த குழுவை தவிர வேறு எந்த குழுவில் இருந்து சங்கம் தொடர்பாக எந்த ஒரு தகவல் வந்தாலும் அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும், மேலும் இது உங்கள் சங்கம் எனவே சங்கம் தொடர்பாக யார் தவறான  தகவல் கூறினாலும் அதைகுறித்து சங்கத்தை நேரடியாக அணுகி உறுப்பினர்கள் அனைவரும் உங்கள் சந்தேகத்தை நிவர்த்திசெய்து கொள்ளலாம் என்றும் கேட்டுகொள்ளப்படுகிறீர்கள். மேலும் FMS மற்றும் OTT மூலமாக படத்தை விற்று தருவதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. எனவே திரைப்படத்தை விற்பதாக இருந்தாலும், வாங்குவதாக இருந்தாலும் உண்மையான கில்டு சங்கத்தின் கீழ்க்கண்ட முகவரியில்:

Dr.S.P.Jaguar Thangam

President

FILM AND TELEVISION GUILD OF SOUTH INDIA

B1 RAMS FLAT, NEW NO-19 OLD NO-5 JAGATHEESHWARAN ST.

T.NAGAR CHENNAI-17

சங்கத்தை நேரடியாக அணுகுமாறும் கேட்டுகொள்கிறோம்.” என்று தெரிவிக்கிறார்.  

MHC over Guild Jagurar thangams complaint over fake association  

மேலும் சரியாக விசாரித்து முறையாக உத்தரவிட்ட நீதியரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேசிய ஜாகுவார் தங்கம், நீதியை நிலைநாட்டி உறுப்பினர்களின் நல் வாழ்வில் ஒளியேற்றி வைத்த மாண்புமிகு உயர்நீதிமன்றத்திற்கு கில்டு தயாரிப்பாளர்கள் சங்கம் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

இணைப்பில் உள்ளவை:- போலி கில்டு அமைப்பு என ஜாகுவார் தங்கம் குறிப்பிட்ட அமைப்பின் நிதி திரட்டும் அறிக்கை,  வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் ஜாகுவார் தங்கம் தலைமை வகிக்கும் கில்டு அமைப்பே உண்மையானது என்றும், அதன் லோகோவையும் பெயரையும் பயன்படுத்தக் கூடாது என G.பாலசுப்ரமணியம் தரப்பினருக்கு, நீதிமன்றம் பிறப்பித்த கோர்ட் ஆர்டர் நகல்.

ALSO READ: "இது சர்வாதிகாரம்"!.. 'ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா' குறித்து இயக்குநர் அமீர் பரபரப்பு கருத்து!

MHC over Guild Jagurar thangams complaint over fake association

People looking for online information on Complaint, Fake, GUILD SOUTH, Jaguar Thangam, MHC will find this news story useful.