“திருமணம் முடிந்து 2 வருஷமாச்சு” - பிரபல நாயகி அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடித்த ‘சரவணா’ திரைப்படத்தில் நடித்த பாலிவுட் நடிகை மேக்னா நாயுடு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்த தனது திருமணம் பற்றிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.

Meghna Naidu Shares Her First Bridal Pic From Her Secret Wedding

சரத்குமார் நடித்த ‘வைத்தீஸ்வரன்’, ‘வீராச்சாமி’, ‘வாடா’, ‘ஜாம்பவான்’ திரைப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர தனுஷ் நடித்த ‘குட்டி’, கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த நிலையில், நடிகை மேக்னா நாயுடு டென்னிஸ் வீரர் ஒருவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்துக் கொண்டது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரரான லூயிஸ் என்பவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்து முறைப்படி மும்பையில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டதாக மேக்னா நாயுடு தெரிவித்துள்ளார்.

தங்களது தனிமைக்கு மதிப்பளித்த அனைவருக்கும் நன்றி, சிலருக்கு பெரிய செய்தி காத்திருக்கு.. இது பற்றி தெரிந்தவர்களுக்கும், சந்தேகம் இருப்பவர்களுக்கும் ஒரு செய்தி. Luis Miguel Reis இவரை விட பொருத்தமான ஒரு நபரை எனது வாழ்க்கை துணையாக  தேர்ந்தெடுக்க முடியாது. 8 வருட கால காதல் இது. நமது காதல் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளித்த குடும்பத்தினருக்கு என்றும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“திருமணம் முடிந்து 2 வருஷமாச்சு” - பிரபல நாயகி அறிவிப்பு வீடியோ