Udanprape others
www.garudabazaar.com

"போடு.. போடு!!".. வேறலெவல் கேரக்டர் பெயர் .. பிரபாஸின் ராதே ஷ்யாம் டீசர் குறித்த மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வம்சி மற் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகும் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் சிறப்பு டீசர் அக்டோபர் 23 வெளியாகிறது

meet vikramaditya Prabhas radhe shyam teaser announcement

வம்சி மற்றும் பிரமோத் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் திரைப்படம் ராதே ஷியாம். ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் நாயகனாக ‘பாகுபலி’ புகழ் பிரபாஸ், நாயகியாக தளபதி விஜய்யின் பீஸ்ட் பட நாயகியான பூஜா ஹெக்டே நடிக்கின்றனர்.

ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ள இப்படத்தின் சிறப்பு டீசர் அவரது பிறந்த நாளான அக்டோபர் 23 அன்று வெளியாகிறது. இப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரமான விக்ரமாதித்யா எனும் பெயர் இடம்பெறும் இந்த சிறப்பு டீசர் ஆங்கிலத்தில் வசனங்களை கொண்டிருக்கும் என்றும் பல்வேறு மொழிகளில் சப்-டைட்டில்களோடு இது வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 23 அன்று டீசர் வெளியாவதை அறிவிக்கும் வகையில் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ஸ்டைலான போஸில் பிரபாஸ் எதையோ யோசிப்பதை இதில் காணலாம். 'விக்ரமாதித்யா யார்?' என்கிற கேள்வியோடு இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பூஜா ஹெக்டேவின் சிறப்பு போஸ்டர், அவரது பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. இப்போது பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளில் ஜனவரி 14, 2022 அன்று வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

meet vikramaditya Prabhas radhe shyam teaser announcement

People looking for online information on Pooja Hegde, Prabhas, Radhe Shyam will find this news story useful.