Reliable Software
www.garudabazaar.com

"என்ன தைரியம் இவருக்கு"... சைக்கிளில் வந்த தளபதி விஜய்... மாஸ்டர் நடிகர் வெளியிட்ட பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வரும் நிலையில், மக்கள் ஓட்டுச் சாவடிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்து, தங்கள் ஜனநாயக கடமையை  முடித்து வருகின்றனர். பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல, நமது கோலிவுட் பிரபலங்கள் பலர் இன்று காலையில் இருந்தே வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.

master actor post about actor vijay trending மாஸ்டர் நடிகர் வெளியிட்ட பதிவு

கோலிவுட் டின் முன்னணி நடிகர்களான அஜித், ஷாலினி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், அக் ஷரா ஹாசன், சூர்யா, கார்த்தி, சிவகுமார், சிவகார்த்திகேயன், விஜய் என கோலிவுட் திரையுலகின் நட்சத்திரங்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர்.

master actor post about actor vijay trending மாஸ்டர் நடிகர் வெளியிட்ட பதிவு

இந்நிலையில் இன்று முழுவதும் சமூக வலைதளங்கள் வைரல் ஆகி வருவது தளபதி விஜய் சைக்கிளில் ஓட்டு போட வந்த வீடியோக்கள் தான். மிகவும் மாஸாக வந்த விஜய்யை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இந்த விடியோக்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தளபதி விஜய்யின் ரசிகரான நடிகர் ஷாந்தனு இதுபற்றி ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது "என்ன தைரியம் இவருக்கு #Beastmode" என்று வெறித்தனமான ஒரு பதிவிட்டுள்ளார். தற்போது #விஜய் #தளபதி போன்ற ஹேஷ்டேக்குகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : Vijay

தொடர்புடைய இணைப்புகள்

master actor post about actor vijay trending மாஸ்டர் நடிகர் வெளியிட்ட பதிவு

People looking for online information on Vijay will find this news story useful.